தூத்துக்குடி மாவட்டம்: 23.09.2021
கோவில்பட்டி பழைய பேரூந்து நிலையம் அருகிலுள்ள தனலெட்சுமி என்ற ஹோட்டலில் (22.09.2021) அன்றிரவு கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த கனகவேல் மகன் சிவராமன் (25), அவரது நண்பர்களான பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் முருகன் (28) மற்றும் கோவில்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் மகன் பிரசாத் (29) ஆகிய மூவரும் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர்.
இவர்களுக்கு பக்கத்து மேசையில் சாப்பிட்டு கொண்டிருந்த கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர்களான பால்ராஜ் மகன் அருண்குமார் (30) அவரது நண்பர்களான மாரிச்செல்வம் மகன் பால்ராஜ் (23), வெயிலுமுத்து மகன் நாகராஜ் (23), முத்துராமலிங்கம் மகன் அஜித்குமார் (21) மற்றும் அந்தோணிபாண்டியன் மகன் சங்கரநாரயணன் (27) ஆகிய 5 பேரும் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர்.
இதில் சிவராமன் தரப்பினர் மேற்படி ஹோட்டலுக்கு அடிக்கடி வருவார்கள் என்பதால் அக்கடை ஊழியர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதை பார்த்த அருண்குமார் தரப்பினர் தங்களை பார்த்துதான் சிவராமன் தரப்பினர் சிரித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்து மேற்படி சிவராமன் தரப்பினரை அருண்குமார் தரப்பினர் சத்தம்போட்டுள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் ஒருவரையொருவர் தவறாக பேசி அங்கிருந்த சேர், குழம்பு வாளியால் தாக்கி கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இருதரப்பினரும் புகார் அளித்துள்ளதன் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன் தனிப்பிரிவு தலைமை காவலர் சேதுராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக