வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தமிழ்நாடு முழுவதும் 560 ரவுடிகள் கைது!!! தூத்துக்குடியில் இரவில் விடிய. விடிய 47 ரவுடி கைது!! தூப்பாக்கி வாள் கத்தி அரிவாள் கூர்மையான பயங்கரஆயுதங்கள் பறிமுதல்!!வெளியூர் மற்றும் உள்ளூர் ரவுடிகள் அச்சத்தில் அதிர்ச்சி!! !

 தூத்துக்குடி லீக்ஸ் : 24.09.2021


தமிழ்நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 560 ரவுடிகள் கைது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள் பறிமுதல் செய்தனர்



சில ரவுடிகளிடம் இருந்து  துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல்

 கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர்

 தீவிர ரோந்து (Strorming Operation) - 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  நேற்று (23.09.2021) இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Strorming Operation) மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர்  இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது

 அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது, வாகன சோதனையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அதிரடியாக தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் வெளியூர் மற்றும் உள்ளூர் ரவுடிகள் அச்சத்தில் அதிர்ச்சி அடைந்து போயுள்ளார்கள்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக