புதன், 8 ஜூன், 2022

போதை பாக்கு - புகையிலை பொருட்கள் விற்பனை கோவில் பட்டியில் மூன்று பேர் கைது 10 கிலோ புகையிலைபறிமுதல்

தூத்துக்குடி லீக்ஸ்: 08-.06.2022

 கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது - ரூபாய் 13,000/-  மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.



இது பற்றிய செய்தியாவது:-

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாதவராஜா மற்றும் போலீசார்  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி செக்கடி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருவர்களை பிடித்து விசாரணை செய்ததில் .....

கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் சின்னத்தம்பி (34), கோவில்பட்டி கே.கே நகரை சேர்ந்த கருப்பையா மகன் செல்லபெருமாள் (61) மற்றும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் தெய்வேந்திரன் (51) என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.




உடனே மேற்படி போலீசார்  சின்னத்தம்பி, செல்லபெருமாள் மற்றும் தெய்வேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 13,000/-மதிப்புள்ள 10 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக