கண்ணீர் அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீர் அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 மார்ச், 2025

கண்ணீர் அஞ்சலிதியாகி பெஞ்சமின் அவர்களின் மனைவி B. பெட்லா பெஞ்சமின் காலமானார் அரசியல் கட்சிகள் தலைவர் கள் பரதர் குல நலஅமைப்புகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Tamil Nadu updates,3-3-2025

கண்ணீர் அஞ்சலி

பிறப்பு: 16.06.1929
இறப்பு: 02.03.2025

தூத்துக்குடி: இந்தியாவின் விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று ஆயுள் தண்டனை பெற்ற தியாகி பெஞ்சமின் அவர்களின் மனைவி B. பெட்லா பெஞ்சமின் (வயது 95) அவர்கள் 02.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.




அமலிநகரில் நாளை இறுதி ஊர்வலம்!!!

அன்னாரின் இறுதிச்சடங்கு 04.03.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.




அவரது மறைவுக்கு மாவட்டம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் அரசியல் கட்சித் தலைவர்கள், பரதர் குல நலஅமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

- செய்தியாளர்


சனி, 2 நவம்பர், 2024

தூத்துக்குடியில் கல்லறை நாள் நிகழ்ச்சி கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்க ப்பட்டது

தூத்துக்குடி கிறிஸ்தவ மக்கள்  தங்களது வீட்டில் இறந்த உறவுகளை நினைவு கூறும் கல்லறை நாள் சோகத்தில் கல்லறை தோட்டம் சென்று கல்லறை மீது மெழுகுவர்த்தி மலர் மாலை பூ தூவி வழிபட்டனர்.




இது பற்றிய செய்தியாவது;+

      வருடத்தில்  நவம்பா்  2 ஆம்    தேதி    உலகம்  முழுவதும்  கிறிஸ்தவா்களால்  கல்லறை திரு நாள் தங்கள் உடன் வாழ்ந்து மறைந்தவர்களை நினைத்திடும்  நிகழ்வு நடைபெறும்.

 


  தூத்துக்குடியில்  கிறிஸ்தவ  மக்கள்  தங்கள் குடும்பத்தில் உள்ள இறந்தவா்களின்  நினைவாக  அவா்களது  கல்லறைக்குச் சென்று மலா்களால் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வணங்கி வருகின்றனா்  



பாத்திமாநகா் கல்லறைத் தோட்டத்தில்   தூத்துக்குடி  மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன்அந்தோணி   தலைமையில் ஆத்மாக்களுக்கான திருப்பலி நடைபெற்றது  இந்நிகழ்வில்  மறைமாவட்ட முதன்மைக்குரு  ரவிபாலன் மற்றும்  பனிமய மாதா பங்கு தந்தை உட்பட பலா் கலந்து கொண்டனா் .



 இது போன்று   தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா்  பங்கில்   அமைந்தள்ள  ஆரோக்கியபுரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில்  தாளமுத்துநகா்  உதவி பங்கு தந்தை  பாலன்   தலைமையில் திருப்பலி நடைபெற்றது   மக்கள் அதிகமாக கலந்து கொண்டு  தங்கள் குடும்பத்தில்  இறந்தவா்களுக்கு  மலா் தூவி மெழுகுவா்த்தி ஏற்றி  நினைவு அஞ்சலி  செலுத்தினாா்கள்

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பில் களத்தில் நின்றவர்!!!தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

10-9-2024 photo news 

by Arunan journalist 

தமிழகத்தில் வணிகர்களின் பாதுகாவலர்களாகவும் நாசா கார ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு சிறந்த மக்கள் போராளியாகவும் திகழ்ந்தவர் 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் 

சற்று முன்... காலமானார்.


இது பற்றிய செய்தியாவது:-

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்

கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட வணிகர் சங்க பேரவை

தலைவர் வெள்ளையன் 

நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று( 10-9-2024)

பிற்பகல் 02.30 மணிக்கு காலமானார்.

இவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஆக இருந்து வந்தார் 

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பில் களத்தில் நின்றவர்!!!

ஆன்- லைன் வர்த்தக எதிராகவும் போராட்டம் 

நம்நாட்டு தயாரிப்பு செய்யும்  பொருட்கள் வாங்க வேண்டும் விற்பனை செய்ய வேண்டும் சுதேசி கொள்கை உடையவராகவும் சங்கம் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு தூண்டும் இதற்காக சுதேசி மாநாடு நடத்தியவர்..


தூத்துக்குடியில் இயங்கி வந்த 

நாசா கார ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில் வியாபாரிகளையும் போராட வைத்தார் அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு பல்வேறு போராட்டத்தில் களத்தில் நின்றார் 

சிறந்த மக்கள் போராளியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் 



இவர் மறைவு செய்தி எல்லோர் மனதிலும் தீரா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 நாளை 11-9-2024

கடையடைப்பு!!


_தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் ஐயா திரு வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி நாளை_ 11-9-2024 புதன்கிழமை தமிழ் நாடு முழுவதும் கடைகள் அடைப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.