தூத்துக்குடி கிறிஸ்தவ மக்கள் தங்களது வீட்டில் இறந்த உறவுகளை நினைவு கூறும் கல்லறை நாள் சோகத்தில் கல்லறை தோட்டம் சென்று கல்லறை மீது மெழுகுவர்த்தி மலர் மாலை பூ தூவி வழிபட்டனர்.
இது பற்றிய செய்தியாவது;+
வருடத்தில் நவம்பா் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களால் கல்லறை திரு நாள் தங்கள் உடன் வாழ்ந்து மறைந்தவர்களை நினைத்திடும் நிகழ்வு நடைபெறும்.
தூத்துக்குடியில் கிறிஸ்தவ மக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள இறந்தவா்களின் நினைவாக அவா்களது கல்லறைக்குச் சென்று மலா்களால் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வணங்கி வருகின்றனா்
பாத்திமாநகா் கல்லறைத் தோட்டத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன்அந்தோணி தலைமையில் ஆத்மாக்களுக்கான திருப்பலி நடைபெற்றது இந்நிகழ்வில் மறைமாவட்ட முதன்மைக்குரு ரவிபாலன் மற்றும் பனிமய மாதா பங்கு தந்தை உட்பட பலா் கலந்து கொண்டனா் .
இது போன்று தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் அமைந்தள்ள ஆரோக்கியபுரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் தாளமுத்துநகா் உதவி பங்கு தந்தை பாலன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது மக்கள் அதிகமாக கலந்து கொண்டு தங்கள் குடும்பத்தில் இறந்தவா்களுக்கு மலா் தூவி மெழுகுவா்த்தி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்தினாா்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக