திங்கள், 3 மார்ச், 2025

கண்ணீர் அஞ்சலிதியாகி பெஞ்சமின் அவர்களின் மனைவி B. பெட்லா பெஞ்சமின் காலமானார் அரசியல் கட்சிகள் தலைவர் கள் பரதர் குல நலஅமைப்புகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Tamil Nadu updates,3-3-2025

கண்ணீர் அஞ்சலி

பிறப்பு: 16.06.1929
இறப்பு: 02.03.2025

தூத்துக்குடி: இந்தியாவின் விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று ஆயுள் தண்டனை பெற்ற தியாகி பெஞ்சமின் அவர்களின் மனைவி B. பெட்லா பெஞ்சமின் (வயது 95) அவர்கள் 02.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.




அமலிநகரில் நாளை இறுதி ஊர்வலம்!!!

அன்னாரின் இறுதிச்சடங்கு 04.03.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.




அவரது மறைவுக்கு மாவட்டம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் அரசியல் கட்சித் தலைவர்கள், பரதர் குல நலஅமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

- செய்தியாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக