மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேர்வு எழுதுவதில் உள்ள சிரமங்களை நீக்கி தற்போதைய தேர்வு முறையில், மாணவர்களுக்காக தேர்வு எழுதக்கூடிய "ஸ்க்ரைப்" ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் பயிற்சி தொடர்பான முறையான சிறப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி ஆட்டிசம், பார்வைக் குறைபாடுகள் மற்றும் பிற சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பது மற்றும் தேர்வு எழுதுவதற்கான மகிழ்ச்சியான சிறப்பான சூழலை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்றலில் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாப்பதும்8அவர்களின் திறன் மற்றும் .உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்துவதிலும் உள்ள அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உரிய முறையில் திட்டமிட்டு, விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வு செய்து உடனடி தீர்வு காண திட்டமிட வேண்டும்.*
ஆட்டிசம், குறைபாடுகள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு தேர்வுகளின் போது அவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கேற்றவாறு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி, அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதத்தில் ஆசிரியர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள், தேர்வு மையங்கள் செயல்பட வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பாடம் சார்ந்த பயிற்சி பெற்ற எழுத்தர், ஆசிரியர்களை மட்டுமே ஸ்க்ரைப் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
மாணவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு திறம்பட உதவக்கூடிய பாடம் சார்ந்த ஆசிரியர்களை தற்பொழுது தமிழக அரசு உரிய முறையில் திட்டமிட்டு நியமிக்காததால், தகுதியான எழுத்தாளர்கள் இல்லாததால், பார்வை குறைபாடுள்ளவர்கள், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள், டிஸ்லெக்ஸியா மற்றும் ஆட்டிசம் உள்ளவர்கள் உள்ளிட்ட சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் தேர்வுகளில் பின்னடைவை சந்தித்து, தொடர்ந்து தேர்வுகளில் ஏற்படும் அழுத்தத்தால் கல்வி கற்பதையே நிறுத்தி விடுகின்றனர்.
தமிழக அரசின் தற்போதைய தேர்வு முறையில், கற்றலில் குறைபாடு உடைய இந்த சிறப்புக் குழந்தைகளுக்கு நியமிக்கப்படும் "ஸ்க்ரைப்" எழுத்தாளர்கள், வெவ்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதால், பெரும்பாலும்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் பாடம் குறித்த அடிப்படை அறிவு இல்லாததால், தவறான விளக்கங்கள் மற்றும் பதில்களை எழுதும் சூழ்நிலையும்,
போதிய பயிற்சியும் இல்லாததால்,
பொறுமையோடும், அன்போடும்,
மனித நேயத்துடன் பல்வேறு குறைபாடுகள் உடைய மாணவர்கள் தேர்வில் பதில்களை சொல்லும் பொழுது புரிந்து கொள்ளாமல் செயல்படுவதால் , மாணவர்களின் மனநிலை உணர்வுகள் பாதிக்கப்பட்டு , பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
இது மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமல்ல, அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையையும் பாதிக்கிறது.
பிரச்சினை!!!
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய பிளஸ் டூ தேர்வுகள் பல மையங்களில் மாற்றுத்திறனாளி
மாணவர்கள், பல்வேறு பாட பிரிவுகளை சேர்ந்த ஸ்க்ரைப் ஆசிரியர்கள் தமிழ் மற்றும் விருப்ப மொழி தேர்வுகளில் நியமிக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வில் பிரச்சனைகளை சந்தித்தனர்.
அவர்களுக்கு உதவ நியமிக்கப்பட்ட ஸ்க்ரைப் - எழுத்தர் ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழில் விடைகள் கூறியதை புரிந்துகொண்டு தமிழில் எழுதுவதில் சிரமப்பட்டுள்ளனர்.
ஏனெனில் அவர்களுக்கு தமிழில் மொழிப் புரிதல் குறைவாக இருந்தது. மேலும் ஸ்க்ரைப் - எழுத்தர் ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
பல்வேறு பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரமாக ஸ்க்ரைப் - எழுத்தர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதால், ஆட்டிசம் மற்றும் பேச்சு குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்கள் பதில்களை ஸ்க்ரைப் - எழுத்தர் ஆசிரியர்களிடம் தெரிவிப்பதில் குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேபோல், பிற மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்களும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சரியான ஆதரவு மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் சரியான திட்டமிடல் இல்லாததாலும், இவர்களின் சூழ்நிலை மேம்படுத்துவதற்கு தேவையான
முறையான உள்கட்டமைப்பு இல்லாததால் சிறப்பு நிலை மாணவர்களுக்கு தேவையற்ற சிரமங்களும் மன அழுத்தமும் ஏற்பட்டு வருகின்றது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக கல்வித்துறை அமைச்சர், மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து உரிய திட்டங்களை செயல்படுத்தி உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்ற தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் வகுப்புக மாணவர்களுடன் சமமாகத் தேர்வுகளில் பங்கேற்கத் தேவையான சூழ்நிலையை விரைவாக தாய் உள்ளத்தோடு போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும்.
சிறப்புத் தேவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேர்வு பயத்தை, மன அழுத்தத்தை போக்கி, கடவுளின் குழந்தைகளாக விளங்கும் இந்த சிறப்பு நிலை மாணவர்கள், தங்கள் சவால்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வுகளை எழுதும் வகையில்.உகந்த சூழலை உருவாக்கி, குறிப்பிட்ட பாடம் மற்றும் பாடத்திட்டத் தேவைகளின் அடிப்படையில், மாணவரின் முறைகளை புரிந்து கொண்டு எழுதும் வகையில் அந்தந்த பாடத்தை சேர்ந்த ஸ்க்ரைப் - எழுத்தர் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்
இனி எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, இதன் மூலம் பார்வைக் குறைபாடுகள், செவித்திறன் குறைபாடுகள், டிஸ்லெக்ஸியா மற்றும் ஆட்டிசம் உள்ள மாணவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் தேர்வுகளை எழுதக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி
சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம், உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கவும், கட்டளில் குறைபாடு உள்ள சிறப்பு நிலை மாணவர்கள் தங்கள் முழு திறனையும் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தி, தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் அடைவதற்கான, சாதிப்பதற்கான அற்புதமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதும், அவர்களின் கல்வித் துறைகளில் வெற்றிபெற தேவையான ஆதரவை வழங்குவதும் நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கல்வித் துறை, எழுத்தர் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும், பாடம் சார்ந்த எழுத்தர் ஆசிரியர்களை நியமிக்கவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உள்ளடக்கிய கல்வி சூழலை உருவாக்கவும் புதிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறந்து விளங்கவும், கல்வி இலக்குகளை அடையவும் தேவையான உதவிகளைப் பெறவும் அரசாங்கம் உறுதி செய்ய முடியும்.*
இதன் மூலம் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் நம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் தேர்வுகளை எழுதி வெற்றி பெற முடியும். இதன் மூலம் தகுதிவாய்ந்த ஸ்க்ரைப் - எழுத்தர் இல்லாமல், தேர்வுகளால் மன அழுத்தத்தை சந்தித்து, எதிர்காலத்தில் கல்வி கற்பதை தடையாக நினைக்கும் மனப்பான்மையிலிருந்து விடுபட்டு தேர்வுகளை கொண்டாடி மகிழ்ந்து கல்வித்துறையிலும்,தங்களின் எதிர்கால வாழ்க்கையிலும் சிறந்த சாதனையாளர்களாக மாறுவதற்கான சூழ்நிலை அமையும்
ஏ.என்.எஸ்.பிரசாத்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக