Tamil Nadu updates, photo news by Arunan journalist 4-11-2026
தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!
தூத்துக்குடி, நவ. 4:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஹவுசிங் போர்டு காலனி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவம்பர் 4) காலை 11 மணியளவில் ஹவுசிங் போர்டு காலனியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தீபாவளி பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது மேயர்,ஜெகன் பெரியசாமி பேசியதாவது
தூத்துக்குடி மாநகரைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பும் சேவையும் பாராட்டுக்குரியது.
அதேபோல், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் சேவையும் பாராட்டுக்குரியது.
சமூகத்தின் அன்றாடத் தேவைகளில் முக்கியப் பங்காற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதனையடுத்துமேயர் ஜெகன் பெரியசாமி தூய்மைப் பணியாளர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தீபாவளி பரிசுகள் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக