தக்கதூத்துக்குடி தாளமுத்துநகர் கொலை வழக்கில் 6 மணி நேரத்தில் நான்கு பேர் கைது!
தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட விரோதம் காரணமாக பேனர் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்து கொலைச் சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலை சம்பவம் ஆறு பேர் உடனடி கைது !!!
இதில் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிவச்சந்திரன், சிவகுமார், மணிகண்டன் மற்றும் ரவி ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த ஆறு மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக