புதன், 4 நவம்பர், 2026

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்கள் தீபாவளி வாழ்த்து கடிதம்! தமிழ் செம்மல் விருது பெற்ற அன்பழகனுக்கு பாராட்டு விழா!

Tamil Nadu updates,4-11-2026 thoothukudileaks 

தூத்துக்குடி, நவ.4:

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாணவ, மாணவிகள் தீபாவளி வாழ்த்துக் கடிதம் எழுதும் நிகழ்ச்சியும், தமிழ் செம்மல் விருது பெற்ற அன்பழகனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளியில்மாணவிகள் thoothukudileaks


4.11.2026 புதன்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கணகரத்தின மணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ் செம்மல் விருது பெற்ற மோ. அன்பழகனுக்கு பள்ளியின் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, பள்ளியின் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதங்கள் எழுதினர்.


தமிழ் செம்மல் விருது பெற்ற அன்பழகனைப் பாராட்டி நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ் வாழ்த்துக் கவிதை வாசித்தார். பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், லாரன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் செம்மல் விருது பெற்ற அன்பழகனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது thoothukudileaks


நிகழ்ச்சியின் நிறைவாக தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு மன்றத் தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியைப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் ஜீசஸ் ஆல்பன் தொகுத்து வழங்கினார்.


இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு மன்றத்தினர் செய்திருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக