வெள்ளி, 23 அக்டோபர், 2026

தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைதைக் கண்டித்து தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !!! thoothukudileaks

 #Tamil Nadu updates,thoothukudinews, #தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

Arunan Reporter 24-10-2026

#இன்றைய அரசியல் செய்தி!!!

தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைதைக் கண்டித்து தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 50க்கும்  மேற்பட்டோர் பங்கேற்பு !!!

தூத்துக்குடி, அக்.24:

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி 12-வது மையவாடி வாசல் எதிரே உள்ள மைதானத்தில் அக்டோபர் 24ஆம் தேதி இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks Naam tamilar news


ஆர்ப்பாட்டத்தின்போது, 'தமிழக அரசே! நாம் தமிழர் உறவுகள் மீது பொய் வழக்கு புனையாதே!' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியபடி தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks Naam tamilar news

thoothukudileaks Naam tamilar news

அண்ணன் சீமான் என்ன சொன்னாரு தெரியுமா?     வீடியோ பார்க்க 


கார்த்திகா கைது விவகாரம் என்ன?

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி அப்போதைய முதலமைச்சரின் வாகனம் செல்லும் பாதையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கார்த்திகா உள்ளிட்டோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுவிப்பு ஏன் !!!

இந்நிலையில்...

, கார்த்திகாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கை அக்டோபர் 22ஆம் தேதி இரவு அவசர வழக்காக விசாரித்த தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் உமா மகேஸ்வரி, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து அக்டோபர் 23ஆம் தேதி கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோவை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


கார்த்திகாவின் கைதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்டோபர் 24ஆம் தேதி நடத்தப்படவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


இருப்பினும், தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதாகக் குற்றம்சாட்டி, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்., 'தமிழக அரசே! நாம் தமிழர் உறவுகள் மீது பொய் வழக்கு புனையாதே!' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியபடி தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக