வெள்ளி, 23 அக்டோபர், 2026

தட்டார்மடம் அருகே பெண் வெட்டிக்கொலை இரண்டு சிறுமிகள் பத்திரமாக மீட்பு! கொலை வழக்கில் தொடர்புடைய 23 வயது இளைஞர் 4 மணி நேரத்தில் கைது சம்பவ இடத்தில் நெல்லை சரக டிஐஜி நேரில் ஆய்வு! செய்தி பற்றி முழு விவரமாவது ...தூத்துக்குடி லீக்ஸ்

News Tamil Nadu updates

thoothukudileaks Arunan Reporter 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தட்டார்மடம் அருகே பெண் வெட்டிக்கொலை இரண்டு சிறுமிகள் பத்திரமாக மீட்பு!

கொலை வழக்கில் தொடர்புடைய 23 வயது இளைஞர் 4 மணி நேரத்தில் கைது  சம்பவ இடத்தில் நெல்லை சரக டிஐஜி நேரில் ஆய்வு! 

தூத்துக்குடி, அக். 23:

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே முதலூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


tattad madam News thoothukudileaks


இச்சம்பவத்தில் இரண்டு சிறுமிகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டதுடன், கொலை வழக்கில் தொடர்புடைய 23 வயது இளைஞரை சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.


தட்டார் மடம் பெண் வெட்டி கொலைசெய்தி thoothukudileaks
கைதான இளைஞர் 

காதல் &முன் விரோதம்!!!

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (43). இவரது 15 வயது மகளுடன் சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானப்பிரகாஷ் (23) காதல் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் ஞானப்பிரகாஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.



 மேலும், ஞானப்பிரகாஷ் அடிக்கடி முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், அக்டோபர் 22ஆம் தேதி இரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானப்பிரகாஷ், அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். 


அப்போது முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (39) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணையில்...

கண்டுபிடிப்பு!!!

இந்தக் கொடூரத் தாக்குதலில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் படுகாயமடைந்தனர்.

மேலும், வீட்டிலிருந்த இரண்டு சிறுமிகளையும் ஞானப்பிரகாஷ் தன்னுடன் அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்திருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இரண்டு சிறுமிகள் பத்திரமாக மீட்பு!

சம்பவம் குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மேரி விஜிலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஞானப்பிரகாஷின் வீட்டில் இருந்த முத்துக்கிருஷ்ணனின் இரண்டு மகள்களையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

4 மணி நேரத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞர் கைது!

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட தட்டார்மடம் காவல்துறையினர், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானப்பிரகாஷை (23), சம்பவம் நடைபெற்ற 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

டிஜஜி திருவுககரசு ஆய்வுthoothukudileaks


சம்பவ இடத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு!

இதற்கிடையே, முதலூர் பகுதியில் கொலை நடைபெற்ற இடத்தைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., இன்று (23.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


சம்பவம் தொடர்பான விவரங்களைக் காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

திருவுககரசு ஆய்வுthoothukudileaksதட்டார் மடம் பெண் வெட்டி கொலை thoothukudileaks


இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், இ.கா.ப., மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


முன்விரோதம் காரணமாகப் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது கணவர் மற்றும் மகன் அரிவாளால் தாக்கப்பட்டதுடன், இரண்டு சிறுமிகளும் அழைத்துச் செல்லப்பட்ட இந்தச் சம்பவம் முதலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks tattad madam news



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக