Tamil Nadu updates photo news by Arunan journalist
thoothukudileaks 23-10-2026
தூத்துக்குடியில் மாபெரும் கல்விக் கடன் முகாம்
தூத்துக்குடியில் மாபெரும் கல்விக் கடன் முகாம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்!
பிணையின்றி ரூ.7 லட்சம் வரை கல்விக் கடன் – 48 தன்னார்வலர்கள் பங்களிப்பு!
தூத்துக்குடி, அக். 23:
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி முன்னெடுப்பில், மாவட்ட மாணவ, மாணவிகளின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் மாபெரும் கல்விக் கடன் முகாம் இன்று (அக்டோபர் 23) தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்தக் கல்விக் கடன் முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிணையின்றி ரூ.7 லட்சம் வரை கல்விக் கடன்!
இந்த முகாமில் பொறியியல், மருத்துவம், விவசாயம், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்விப் படிப்புகளை மேற்கொள்ளும் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.7 லட்சம் வரை எவ்விதப் பிணையும் இன்றி கல்விக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வீடியோ பார்க்க ..
மேலும், மாணவர்களின் கல்விக் கடன் விண்ணப்பங்களை எளிய நடைமுறையில் பரிசீலனை செய்து, விரைவாக ஒப்புதல் வழங்குதல் மற்றும் தகுதிக்கேற்ப வட்டிச் சலுகைகள் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் முகாமில் வழங்கப்பட்டன.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் குடும்ப வருமானம் தொடர்பான எட்டு முக்கிய ஆவணங்களுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
48 தன்னார்வலர்கள் பங்களிப்பு!
முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்ப நடைமுறைகள், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் வங்கிக் கடன் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் பணியில் 48 தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆர்வமுடன் முகாமில் கலந்து கொண்டனர்.
பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உயர்கல்வி வாய்ப்பை இழக்கக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக