வியாழன், 29 அக்டோபர், 2026

தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கு 6 நாட்களாக சிகிச்சையில் இருந்த கணவர் உயிரிழப்பு!அதிர்ச்சி தரும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 8 கொலைகள்? thoothukudileaks

 Tamil Nadu updates,

தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கு 6 நாட்களாக சிகிச்சையில் இருந்த கணவர் உயிரிழப்பு!

மனைவி, மகனை தாக்கிய கணவர் தற்கொலை முயற்சி – கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

தூத்துக்குடி, அக்.29:

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பெண் கொலை வழக்கில், படுகாயமடைந்து கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (51). இவரது மனைவி மேரி விஜிலா (40). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஆதியோரா என்ற மகனும் உள்ளனர்.


முத்துக்கிருஷ்ணனுக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் ஞானபிரகாஷ் (23) என்பவருக்கும் இடையே, முத்துக்கிருஷ்ணனின் 15 வயது மகளுடன் ஞானபிரகாஷ் கொண்டிருந்த காதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.




இந்நிலையில், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி ஞானபிரகாஷ், முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இதையடுத்து முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா மற்றும் 12 வயது மகன் ஆதியோரா ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பின்னர் படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனும், அவரது மகனும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கடந்த 6 நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்துக்கிருஷ்ணன், அக்டோபர் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஞானபிரகாஷை காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


மேலும், தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தமிழ்நாடு காவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


பாக்ஸ் நியூஸ் 

அதிர்ச்சி தரும் தூத்துக்குடி! ஒரே வாரத்தில் 8 கொலைகள்?


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.


ஒரே வாரத்தில் 8 கொலைகள் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசர நிலையை இது உணர்த்துகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக