வியாழன், 29 அக்டோபர், 2026

தூத்துக்குடி மறைமாவட்டம் சார்பில் அகில உலக தேசிய ஒற்றுமை தின சிறப்புப் போட்டிகள்: மாணவர்களின் கண்கவர் திறமைகள் வெளிப்பாடு!

Tamil Nadu updates 

photo news by Arunan Reporter 

தூத்துக்குடி மறைமாவட்டம் சார்பில் அகில உலக தேசிய ஒற்றுமை தின சிறப்புப் போட்டிகள்: மாணவர்களின் கண்கவர் திறமைகள் வெளிப்பாடு!

தூத்துக்குடி, அக்டோபர் 29:

தூத்துக்குடி மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் சார்பாக, அகில உலக தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நகரப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான சிறப்புப் போட்டிகள் கடந்த புதன்கிழமை (28.10.2026) அன்று கோலாகலமாக நடத்தப்பட்டன.

தூத்துக்குடி பத்திநாதபுரத்தில் உள்ள நற்செய்தி நடுவத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பிற்பகல் 2.00 மணிக்கு வருகைப்பதிவுடன் தொடங்கியது.

தூத்துக்குடி லீக்ஸ்


 இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து, பல்வேறு சமயங்களின் திருநூல்களும் திருக்குறளும் மாணவ, மாணவியர்களால் வாசிக்கப்பட்டது 

மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

சிறப்பான வரவேற்பும் நடுவர் அறிமுகமும்:

நிகழ்ச்சிக்கு  மா.தங்கையா  வரவேற்புரை நிகழ்த்தினார். 

பல்சமய உரையாடல் பணிக்குழுச் செயலர் தந்தை அருள்பணி. பென்சிகர் லூசன்  வாழ்த்துரை வழங்கி, வருகைதந்த நடுவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,

  • அருள்சகோ. ஜெஸி (மேனாள் பேராசிரியர், மரியன்னைக் கல்லூரி)
  • பர்வீன் சுல்தானா (பேராசிரியர், மரியன்னை கல்லூரி)
  •  சம்சுதீன் ரியாஜி (ஏ.கே. மகளிர் அரபிக் கல்லூரி) ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, அன்பளிப்பு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வம்: 

பிற்பகல் 2.45 மணிக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் தொடங்கின. 

இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 


14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்சமய தோழர்கள் என மொத்தம் 110 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

சுதந்திரராஜ்  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல்: 


மாலை 3.45 மணிக்கு மதிப்பீடுகள் செய்யப்பட்டு, பொது அமர்வு மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 


ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்குப் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. 


மேலும், போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. இப்போட்டிக்கான பரிசுகளை நல்உள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் ...

 மின்னல் அம்ஜத்  நன்றியுரை கூறினார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்பணி. பென்சிகர் லூசன் அவர்களுடன் இணைந்து நற்செய்தி நடுவப் பணியாளர்களும், பல்சமய உரையாடல் பணிக்குழுத் தோழர்களும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் விவரம்:

1. பேச்சுப் போட்டி:

  • முதல் பரிசு: அல்பியா (சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி)
  • இரண்டாம் பரிசு: சரண்யா (புனித வளன் மெட்ரிக். பள்ளி, மங்களகிரி)
  • மூன்றாம் பரிசு: நிதிஷ் (எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி)

2. கட்டுரைப் போட்டி:

  • முதல் பரிசு: தர்ஷினி (டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனர் பள்ளி, தூத்துக்குடி)
  • இரண்டாம் பரிசு: ஐஃபீனா (கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி)
  • மூன்றாம் பரிசு: யுவஸ்ரீ (சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி)

3. ஓவியப் போட்டி:

  • முதல் பரிசு: நிரஞ்சனா (சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி)
  • இரண்டாம் பரிசு: வர்ஷினி ஓவியா (கிரஸண்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி)
  • மூன்றாம் பரிசு: சாதனாஸ்ரீ (டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனர் பள்ளி, தூத்துக்குடி)

அறிக்கை தயாரிப்பு:

  • திருமதி. மைக்லின் மேரி (ஒருங்கிணைப்பாளர், பல்சமய உரையாடல் மன்றம், தூத்துக்குடி மறைமாவட்டம்)
  • அருள்பணி. பென்சிகர் லூசன் (மறைமாவட்ட செயலர், பல்சமய உரையாடல் பணிக்குழு & நற்செய்தி நடுவம், தூத்துக்குடி மறைமாவட்டம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக