திங்கள், 21 செப்டம்பர், 2026

கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் பரபரப்பு புகார் மனு

Tamil Nadu updates 21-9-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

கயத்தாறில் அனுமதியின்றி கனிமவளம் எடுக்கப்பட்டதாக புகார்

கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை......

தூத்துக்குடி, செப்.21:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், அரசின் முறையான அனுமதியின்றி கனிமவளங்கள் எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான மு. பேச்சிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல புகார் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:....

கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே, சென்னை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள சர்வே எண் 378/1 பகுதியில், அரசின் முறையான அனுமதியின்றி ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகளை பயன்படுத்தி கனிமவளம் எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks



இந்த விவகாரத்தில் சிதம்பரம், ஜோதி ஆகியோர் தொடர்புடையவர்கள் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கனிமவளங்கள் அனுமதியின்றி எடுக்கப்பட்டு கடத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதுதொடர்பாக புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களுடன் புகார் அளித்தும், கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் தரப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், பெயரளவில் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுகுறித்து கேள்வி எழுப்பிய தன்னிடம் சம்பந்தப்பட்ட அதிகாரி உரிய முறையில் பதிலளிக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, புகாரில் கூறப்பட்டுள்ள கனிமவள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீதும், கடமையில் தவறியதாக குற்றம்சாட்டப்படும் அதிகாரி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு. பேச்சிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக