ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் திமுக வளர்த்த மாவீரன் கே.வி.கே. சாமி 70 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

 

மாவீரன் கே.வி.கே. சாமி 70-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடியில் நினைவு மண்டபத்தில் மலர்தூவி மரியாதை

தூத்துக்குடி, செப்.20:

மாவீரன் கே.வி.கே. சாமி யின் 70-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் உள்ள வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் திமுக வளர்த்த மாவீரன் கேவிகே சாமி !!!  

கே.வி.கே. சாமி , நெல்லை–தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த காலத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர். 



பேரறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., பெரியார், எம்.ஆர். ராதா உள்ளிட்ட தலைவர்களின் மீது பற்றும் விசுவாசமும் கொண்டிருந்ததுடன், ஏழை, தொழிலாளர்களின் பாதுகாவலராகவும் விளங்கியவர் கே வி கே சாமி என நினைவுகூரப்பட்டார்.


இன்று காலை நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் பிரம்மானந்தம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை கணக்கரத்தின மணி, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் கே.வி.கே. சாமியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது நினைவைப் போற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக