Tamil Nadu updates photo news by Arunan journalist
சென்னை, ஜூன் 19:
அகில இந்திய நாளிதழ் ஊழியர் சம்மேளனத்துடன் இணைந்த தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (TNP&MRU) சார்பில் 26-வது மாநில மாநாடு வருகிற ஜூன் 21-ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது
மாநில மாநாடு
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், ஊடகத் துறை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
தலைமை
மாநாட்டிற்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநிலத் தலைவர் டாக்டர் மு. சிவதமிழவன் தலைமையேற்கிறார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பு!!!
தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயற்கை வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மேலும் நீதித்துறை, அறிவியல், கல்வி மற்றும் சமூக சேவைத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், சிலம்பக் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பத்திரிகையாளர்களின் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஊடகப் பணியாளர்கள், பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக