வெள்ளி, 19 ஜூன், 2026

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கம்: பொதுமக்கள் வேதனை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி:

தூத்துக்குடி, ஜூன் 20:


தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.57 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு, கடந்த 2023 அக்டோபர் 8ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.


thoothukudileaks


நான்கு தளங்களைக் கொண்ட இந்த நவீன பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் மட்டும் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் 120-க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள், பயணிகள் ஓய்வறைகள் பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக மாநகரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

"தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் பாக்ஸ்கள் தற்போது பயன்பாடின்றி ஒரு மூலையில் கிடக்கின்றன." 


thoothukudileaks
செயல்படாமல் ஒன்றாக சேர்த்து கிடக்கும் இரண்டு குடிநீர் பாக்ஸ் 


பேருந்து நிலையம் முழுவதும் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி சார்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியாளர்களும் (security) நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க 

இந்நிலையில், பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 


குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புகள் உடைக்கப்பட்டதுடன், பேருந்து நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த இரண்டு குடிநீர் அமைப்புகளும் அகற்றப்பட்டு ஒரே இடத்தில் செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நவீன பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் இருந்தும், குடிநீர் வசதியை சேதப்படுத்திய சமூக விரோதிகள் யார்? 

ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முடக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் வேததனையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக குடிநீர் வசதிகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆக்ரமிப்பு 

மேலும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வணிக கடைகள் அனைத்தும்  தூத்துக்குடி மாநகராட்சி கடைகள் அனுமதி அளித்துள்ள அளவுக்கு மீறி விரிவுபடுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் 



thoothukudileaks





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக