Tamil Nadu updates
தூத்துக்குடி, ஜூன் 20:
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது கருத்தப்பாலம் அருகே செயல்பட்டு வரும் உதயா ஏஜென்சி மற்றும் எட்டையபுரம் மெயின் ரோட்டில் உள்ள அபி எசன்ஸ் உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட கடைகளில் இருந்து மொத்தம் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமுறைகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் மொத்தம் 260.25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.16,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக