செவ்வாய், 12 மே, 2026

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா

Tamil Nadu updates 13-5-2026

தூத்துக்குடி மே13

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழாவும், அன்னையர் தின விழாவும் தூத்துக்குடி கனி பேலஸில்  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். 


விழாவில்... 

வில்லவராயர் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஜேசையா வில்லவராயர், ஜெயந்தி குரூப் நிறுவனங்களின் பிரகாஷ், ஷோ ஷிப்பிங் ஸ்டீரிமர் ஏஜென்ட்ஸ் நிறுவனத்தின் கிஷோர், தமிழக கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

thoothukudileaks


மேலும் தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவிமைய மூத்த வழக்கறிஞர் கலைச்செல்வி  குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.


இதனைத் தொடர்ந்து...

 தமிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் கலைவாணன், செயலாளர் பீர் முகமது, துணைத்தலைவர் பிரகாஷ், பொருளாளர் ஜெய்சங்கர், சேலம் காண்ட்ராக்ட் ஒர்க்ஸ் வேலு, மக்கள் டெய்லி செய்தி குழுமம் சிஇஓ கி.ம.சங்கர், எஸ்கே கன்ஸ்ட்ரக்ஷன் சாமிகண்ணு, ஆகாஷ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரபாகரன், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணைய உறுப்பினர் துறைமுகம் சத்யா, விமல் ஷிப்பிங் லிமிடெட் ராஜேஷ், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கணேஷ் பிரபாகர், எச்எம்எஸ் ஜெயக்குழு உறுப்பினர் ஜான் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக