Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி, மார்ச் 19:
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் மற்றும் நாயுடு மகாஜன சங்கம் டிரஸ்ட் சார்பில் யுகாதி விழா இன்று மாலை தூத்துக்குடி அபிராமி மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் என். ராமசாமி நாயுடு தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி ஜி. விவேகானந்தன் (MBA) முன்னிலை வகித்தார். செயலாளர் ஆர். ரெங்கசாமி நாயுடு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
விழாவில் டிரஸ்ட் உறுப்பினர் வி.பி. வெங்கடகிருஷ்ணராஜன் (எ) செல்லசாமி நாயுடு (MBA) வரவேற்புரை நிகழ்த்தி, திரளானோர் கலந்துகொண்டதை பாராட்டினார்.
பரிசு வழங்கும் நிகழ்வில் அகில இந்திய அமைப்புச் செயலாளர் ஐ.என்.டி.யு.சி. பி. கதிர்வேல் கலந்து கொண்டு சிறந்தோர் பலருக்கு பாராட்டு பரிசுகளை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டியைச் சேர்ந்த ரீஜென்ட் கிரியேஷன் பி.லிட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் எஸ். ஹரிபாலகன், டாக்டர் டி. செல்வராஜ், டாக்டர் பி. குமரன், தூத்துக்குடி அபிராமி சில்க்ஸ் நிறுவனத்தின் என். சந்திரசேகர் மற்றும் அழகர் ஜூவல்லர்ஸ் அதிபர் ஏ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் வி. வெங்கடேசன் நாயுடு தொகுத்து வழங்கினார். இறுதியில் துணை மேனேஜிங் டிரஸ்டி ஏ. மோகன் நாயுடு நன்றியுரை வழங்கினார்.
யுகாதி விழாவை முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகளும், சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் உரைகளும் நடைபெற்றன.
இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக