சனி, 21 மார்ச், 2026

தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு – சமூக ஊடக கணக்குகள் விவரம் கட்டாயம்!

Tamil Nadu updates photo news by Arunan 

தூத்துக்குடி, 21.03.2026

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

thoothukudileaks


அதன்படி, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 குறிப்பாக ...

Facebook, Twitter (X), YouTube, Instagram உள்ளிட்ட தளங்களில் உள்ள அதிகாரப்பூர்வ கணக்குகள் மற்றும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து கணக்குகளும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும், சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு செலவிடப்படும் தொகையும் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சமூக ஊடகங்களில் செலுத்தப்படும் விளம்பரங்கள், வீடியோக்கள், பதிவுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் (MCMC) இந்த சமூக ஊடக உள்ளடக்கங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thoothukudileaks



 1:

Election Commission of India (ECI) வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

 2:

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணை மார்ச் 15, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இதனுடன் இணைந்து பல புதிய விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

3:

பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் வேட்பாளர்களும், தங்களது அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் Media Certification and Monitoring Committee (MCMC) மூலம் முன் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4:

இந்த விதிமுறைகள் தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் காணப்படும் விளம்பரங்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்கள், இ-பேப்பர்கள், bulk SMS மற்றும் voice messages உள்ளிட்ட அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5:

மாவட்ட அளவில் District MCMC மற்றும் மாநில அளவில் State Level MCMC அமைப்புகள் மூலம் விளம்பரங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இதற்கான மேல்முறையீட்டு குழுவும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

 6:

MCMC சான்றிதழ் பெறாமல் எந்த அரசியல் விளம்பரங்களும் இணைய தளங்களில் வெளியிடக் கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 7:

மேலும், வேட்பாளர்கள் தங்களது உண்மையான சமூக ஊடக கணக்குகளின் விவரங்களை, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அஃபிடவிட்டில் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

8:

சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான முழுமையான கணக்கையும், தேர்தல் முடிவடைந்த 75 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 9:

போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக