விளாத்திகுளம்:மா22
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை தொடர்புடைய விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் 2020ஆம் ஆண்டு 60 வயது மூதாட்டி ஒருவரை காட்டுப் பகுதியில் வைத்து வன்கொடுமை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், இரண்டு ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு எட்டயபுரம் போலீசார் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையில் தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர்.
அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த தர்ம முனீஸ்வரன், அதே நாளில் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் ஒரு பைக்கை திருடியுள்ளார்.
33-வழக்குகள்!!
தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். டிசம்பர் 24ஆம் தேதி முதல் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார். இவர்மீது 33க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஊர் ஊராக சுற்றி ???
ஊர் ஊராக சுற்றித்திரியும் பழக்கமுள்ள தர்ம முனீஸ்வரன், குளத்தூர் அருகே கே.சண்முகபுரம் மற்றும் கொல்லம்பரும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் பழகி, அவர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கே.சண்முகபுரம், வள்ளிநாயகபுரம், வேடநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார்.
பெண்களை குறிவைத்து!!!
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தர்ம முனீஸ்வரன், மார்ச் 6ஆம் தேதி முதல் வேடநத்தம் காட்டுப் பகுதிகளில் உள்ள காற்றாலை அருகே தினமும் வந்து, பைக்கை நிறுத்தி, விவசாய வேலைக்கு வரும் பெண்களை குறிவைத்து பதுங்கி இருந்துள்ளார்.
புரோட்டா மாஸ்டர் தந்த துப்பு!!
காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக வெளியூர் பைக் மணிக்கணக்கில் அப்பகுதியில் நின்றதால் அதன் அருகாமையில் உள்ள புரோட்டா மாஸ்டர் சோலையப்பன் என்பவர் சந்தேகத்தின் பேரில் ..அந்த பைக்கை போட்டோ எடுத்துள்ளார்.
மாணவி கொலை!!!
2026 மார்ச் 10ஆம் தேதி மாலை 6 மணியளவில், தனியாக சென்ற பிளஸ்-2 மாணவியை பார்த்த தர்ம முனீஸ்வரன், அவரை இழுத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சிலர் அங்கு வருவதைக் கண்ட அவர், மாணவி கூச்சலிடாமல் இருக்க அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காட்டுக்குள்ளே பதுங்கி தூத்துக்குடிக்கு தப்பினான்
பின்னர் அந்த இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்து அதிகாலையில் தூத்துக்குடிக்கு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகும் சந்தேகம் வராத வகையில், வழக்கம்போல் மகிளா நீதிமன்றத்தில் மார்ச் 18ஆம் தேதி வரை கையெழுத்திட்டு வந்துள்ளார்.
ஒன்பது நாட்கள் தேடுதல் வேட்டை!!!
இதனால் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் 9 நாட்கள் தீவிரமாக தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், சோலையப்பன் வழங்கிய பைக் புகைப்படத்தின் அடிப்படையில், சம்பவ இடத்திலுள்ள காற்றாலை சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் பல நாட்களாக ஒரே நபர் பைக்கில் வந்து சென்றது கண்டறியப்பட்டது. அந்த பைக்கின் பதிவு எண் மூலம், அது பார்த்திபனூரில் திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் சுற்றி வளைத்த போலீசார்!!!
பின்னர் பார்த்திபனூரில் இருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகள் மூலம், அந்த பைக்கை திருடியவர் தர்ம முனீஸ்வரன் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
வீட்டில் ஹாயாக டிவி செய்தி பார்த்துக் கொண்டு இருந்த போது சுற்றி வளைப்பு!!!
இதையடுத்து ...
தூத்துக்குடி ராஜபாண்டி நகருக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு வீட்டில் டிவியில் செய்தி வேடநத்தம் மாணவி பற்றி என்ன செய்தி வருகிறது என பார்த்துக் கொண்டிருந்த மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரனை சுற்றி வளைத்தனர்.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை மார்ச் 19ஆம் தேதி அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்!!!
மார்ச் 20ஆம் தேதி சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று நடந்த விதம் குறித்து வாக்குமூலம் பெற்று வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் ஒருவரே சம்பந்தப்பட்டாரா அல்லது அவரது கூட்டாளிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்கள். மேலும், அவரது உடலில் இருந்த வெட்டு காயம் மற்றும் சிலரின் மொபைல் போன்கள் தொடர்பாகவும் சந்தேகங்கள் வந்தது.
மாணவி இறுதி சடங்கில் அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் அஞ்சலி!!!
மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்கில் கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக