தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
photo news by Arunan journalist
தூத்துக்குடி, பிப்ரவரி 10:
தூத்துக்குடியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கே. பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை துண்டுப்பிரசுரம் விநியோகம், “விடியா ஆட்சி – உங்கள் வீட்டு பில்லிலே சாட்சி” என்ற பிரச்சாரம் உள்ளிட்ட செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
.
இந்த ஆலோசனைக் கூட்டம் 10.02.2026 செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சோலை மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்த விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள தேர்தல் பணிகள், வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், மக்கள் தொடர்பு இயக்கம், கட்சி அமைப்புகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் அஇஅதிமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக