வியாழன், 1 ஜனவரி, 2026

தமிழக அரசே நடைமுறை படுத்துதூத்துக்குடியில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்க தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் – பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி :ஜன1

தூத்துக்குடியில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபிராமிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய தலைவர் காளிதாசன் விளக்கவுரையாற்றினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் கலா வரவேற்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில்,.. 

சிறிய பரிசோதனை கூடங்களை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 390-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் 100 சதுர அடி, நகர்ப்புறங்களில் 150 சதுர அடி என்ற அளவீட்டில் அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டனர். 

மருத்துவக் கழிவு கட்டணம் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக ரூ.1000 ஆக நிர்ணயித்து, உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் மூலம் அரசு நேரடியாக நிர்வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

thoothukudileaks


"அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது ஆய்வகங்களில் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் குறித்த தெளிவான வழிகாட்டி அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும், மாநில அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. "

"மருந்து கடைகளில் இரத்த பரிசோதனை செய்வதைத் தடை செய்ய வேண்டும், மத்திய அரசு ஆய்வகங்களுக்கு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி-யை திரும்ப பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு ஆய்வக நுட்புனர்களுக்காக கொண்டு வந்துள்ள யுஹெச்ஐடி திட்டத்தை சங்கம் ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் கல்வித் தகுதியை காரணமாக காட்டி ஆய்வக உரிமையாளர்களை வெளியேற்ற முயல்வதை சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறிய பரிசோதனை கூடங்களை நசுக்கும் நோக்கில் மருத்துவரின் சான்றிதழ் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசே நடைமுறை படுத்து!!!

ஆய்வுக்கூட பதிவு கட்டணம் ரூ.5000 என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் அமைச்சர் வாய்மொழியாக ரூ.1000 ஆக குறைப்பதாக அறிவித்ததை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள அலை டு ஹெல்த் கவுன்சிலில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்திற்கு நிரந்தர உறுப்பினர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நலவாரியம்!!!

ஆய்வக நுட்புனர்களுக்கான சீருடை வெள்ளை நிற கோர்ட் சீருடையாக அறிவித்து, மருத்துவத்துறையினர் மட்டுமே அணிய அரசாணை வெளியிட வேண்டும், ஆய்வக நுட்புனர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஆய்வக நுட்புனர்களை பரிசோதனை தவிர பிற பணிகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆய்வக நுட்புனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் ஆன்லைன் முறையில் உறுப்பினர் அட்டை பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், அனைத்து ஆய்வகங்களுக்கும் சிஇஏ பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், மார்ச் 13 அன்று 27-வது ஆண்டு ஆய்வக நுட்புனர்கள் தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி, சங்க கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, இலவச மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கிரிக்கெட், ரிங்பால், கேரம், செஸ், செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆய்வக நுட்புனர்களின் உரிமைகளை காக்க 2026 பிப்ரவரி 15 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் தலைவர் தியாகராஜன், மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், மாநில பொருளாளர் ஆறுமுகம், அகில இந்திய துணைத்தலைவர் துரைசாமி, மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சம்பத்குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மாநில துணை செயலாளர்களாக பாலாஜி, கோபி, சதீஷ், ஜெதீஸ்வரன், சுந்தர், சிவகுமார் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டனர்.

என்ஏபிஎல்சிஇஓவாக இருந்து சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை காப்பாற்ற பல்வேறு உதவிகள் செய்த வெங்கடேஸ்வரன் என்.ஏ.பி.சி-க்கு சிஇஓவாக பதவி உயர்வு பெற்றதற்கும், சிஎம்சி இக்யூஏஎஸ் கோஆர்டினேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் பமிலா கிறிஸ்துதாஸ் அவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட மாநில நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலாளர் மைக்கேல் பிரதீப் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக