செவ்வாய், 30 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது: 22 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 31 -

 தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் இன்று (டிசம்பர் 31) காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். 

thoothukudileaks


இந்த கூட்டத்தில் மொத்தம் 22 பொருட்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மா உணவகங்கள் - ஊதிய ஒதுக்கீடு

மாநகராட்சியில் சொந்தமாக எட்டு அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 67 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரையிலான காலத்திற்கு ரூ.53.33 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இனி நவம்பர் 26, 2025 முதல் மார்ச் 25, 2026 வரையிலான 120 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.325 வீதம் ஊதியம் வழங்க தோராயமாக ரூ.26.13 லட்சம் செலவினம் மேற்கொள்ள மாமன்றம் அனுமதி வழங்கியது.

thoothukudileaks


சிதம்பரநகர்  வணிக வளாகம் காலியாக உள்ள கடை ஏலம்

சிதம்பரநகர் வசதி வணிக வளாகத்தில் உள்ள 31 கடைகளுக்கு ஏலம் நடத்தப்பட்டது. இதில் மூன்று கடைகளுக்கு மட்டும் ஏலம் வந்துள்ளது:

G2 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.12,600. ம.ரா.இந்திரா என்பவர் ரூ.12,700க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

G8 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.17,720.  M.கணேஷ் நாகராஜன் என்பவர் ரூ.17,810க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

G14 கடை: தீர்மானிக்கப்பட்ட தொகை ரூ.21,800.  ரா.மோஷா என்பவர் ரூ.22,000க்கு உயர்ந்த ஏலம் எடுத்துள்ளார்.

மேற்கண்ட மூன்று உயர்ந்த ஏலதாரர்களின் ஒப்பந்தத்தை ஏற்க மாமன்றம் முடிவு செய்தது. மீதமுள்ள 28 கடைகளுக்கு மீண்டும் ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

வாகன நிறுத்துமிடங்கள் - பணியாளர் ஊதியம்

ஜெயராஜரோடு பஸ் நிறுத்தம்: 

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஜூலை 20, 2025 முதல் M/S.பார்க்லெண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம் கட்டண வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மார்ச் 26, 2024 முதல் பிப்ரவரி 25, 2025 வரை CLC பணியாளர் மூலம் ரூ.6.85 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் ஜூலை 20, 2025 வரை ரூ.3.33 லட்சமும் செலவானது. முன்னாள் பணியாளர்களுக்கான ஊதிய நிலுவை தொகைக்கு மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது.



தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்: 

வடக்கு மண்டலத்தில் புதிய பேருந்து நிலைய வாகன வளாகத்தில் மார்ச் 26, 2024 முதல் மார்ச் 25, 2025 வரை ரூ.18.96 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரை ரூ.6.79 லட்சமும் செலவானது. அடுத்த ஓராண்டுக்கு (நவம்பர் 26, 2025 முதல் அக்டோபர் 25, 2026) உத்தேசமாக ரூ.1.80 லட்சம் செலவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையம்: 


ஸ்மார்ட் சிட்டி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் மார்ச் 26, 2024 முதல் மார்ச் 25, 2025 வரை ரூ.25.16 லட்சமும், மார்ச் 26, 2025 முதல் நவம்பர் 25, 2025 வரை ரூ.11.48 லட்சமும் செலவானது. அடுத்த ஓராண்டுக்கு உத்தேசமாக ரூ.6.60 லட்சம் செலவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ஒப்பந்தக்காரர்களுக்கு காலாவதி பணம் திருப்பி வழங்கல்

பல்வேறு ஒப்பந்தக்காரர்கள் பல ஆண்டுகளுக்கு முன் செலுத்திய முன் வைப்பு மற்றும் பாதுகாப்பு வைப்பு தொகைகளை திருப்பி வழங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது:

M/S.Sri Devi Construction: 10 பணிகளுக்கு மொத்தம் ரூ.52,870

வெங்கடேஷ்: 6 பணிகளுக்கு மொத்தம் ரூ.27,740 மற்றும் 2 பணிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட 5% தொகை ரூ.16,757

சுரேஷ்பிரகாஷ்குமார்: ரூ.31,100

T.முருகன்: ரூ.20,000

.முத்துராமலிங்கம்: 

13 ஆண்டுகளுக்கு முன் செலுத்திய வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரை திட்டத்திற்கு மொத்தம் ரூ.2.99 லட்சம்

நில தானப்பத்திரங்கள் ஏற்பு

முள்ளக்காடு கிராமம்: சர்வே எண் 199/7A-ல் 3,565 சதுர அடி பரப்பளவில் P.முருகன், N.ராஜ்சேந்திரன் மற்றும் M.செந்தில் குமார் ஆகியோரின் கிடாப்பிள்ளி நிலம் பிரிப்பு திட்டம் அனுமதிக்கப்பட்டது. சாலை மற்றும் மின் வசதிக்கான இடம் தானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முள்ளக்காடு கிராமம்: சர்வே எண் 109, 110/1, 110/2-ல் 18,950 சதுர அடி பரப்பளவில்  ராஜ்குமார் மற்றும் கங்கராஜா ஆகியோரின் கிடாப்பிள்ளி நிலம் பிரிப்பு திட்டம் அனுமதிக்கப்பட்டு சாலை மற்றும் மின் வசதிக்கான இடம் தானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

thoothukudileaks


ஈகோ பார்க் - தனியார் நிர்வாகம்

கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஈகோ பார்க், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் பராமரிக்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழகுபடுத்தும் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு Paddle Boats, Kayaking, Canoeing, Aqua Cycle போன்ற நீர் சாகச விளையாட்டுகளை நடத்துவதற்கு, தமிழ்நாடு சாகச சுற்றுலா சட்டம் 2023-ன்படி, பணியாளர்கள் பயிற்சி, ஊதியம், காப்பீடு, பராமரிப்பு போன்ற அனைத்து செலவுகளையும் மேற்கொண்டு M/S. Run and Ride Park (Thrill Park) என்ற தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


வருவாயில் மாநகராட்சிக்கு 25% மற்றும் தனியார் நிறுவனத்திற்கு 75% (ஊதியம், பராமரிப்பு உட்பட அனைத்து செலவும் உட்பட) பங்கீடு அடிப்படையில் முன்னோட்டமாக மூன்று மாத கால அளவிற்கு மட்டும் அனுமதி வழங்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது.

மீன் மார்க்கெட் கட்டணம் உயர்வு

வடக்கு மண்டலம் சுபார்ராயர் பட்டியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் வளாகம் புதிய வசதிகளுடன் அழகுபடுத்தி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநகராட்சி வருவாயை பெருக்கும் நோக்குடன், முதல் செலவுகளை ஈடு செய்யும் வகையில், புதிய கட்டிடத்தில் நாள் ஒன்றுக்கு பயன்பாட்டு கட்டணம் ரூ.50 வசூலிக்க மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு சக்திகளுக்கு அச்சுப்பணியும் அதற்கான செலவும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

பொது கழிப்பறைகள் - பராமரிப்பு ஒப்பந்தம் புதுப்பிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளை 24 மணி நேரமும் சுகாதாரமான முறையில் பராமரிக்க குளோப் இன்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

முத்தம்மாள் காலனி பகுதி: 

நவம்பர் 12, 2025 முதல் நவம்பர் 11, 2026 வரை ஓராண்டு காலத்திற்கு ரூ.1.50 லட்சம் (மாதம் ஒன்றுக்கு) என்ற அடிப்படையில் மொத்த உத்தேச செலவு ரூ.18 லட்சம்.

அழகு இந்திரா நகர் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்: அதே நிபந்தனைகளில் ரூ.18 லட்சம் செலவில் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்தம்.

ராஜாஜி பூங்கா, மருத்துவகல்லூரி மருத்துவமனை, ரோச்பூங்கா: இந்த மூன்று இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளின் பராமரிப்பு பணியை ஜனவரி 1, 2026 முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டது.

பூங்காக்கள் பராமரிப்பு

நகரின் 4 முக்கிய பூங்காகளான M.G.R. பூங்கா (பாளை ரோடு TMB காலனி), ராஜாஜி பூங்கா (பாளை ரோடு), முத்து நகர் பீச் பூங்கா (பீச் ரோடு), ரோச் பார்க் (தெற்கு பீச் ரோடு) ஆகியவற்றை பசுமையான முறையில் சிறப்பாக பராமரிக்க தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை ஆவுட்சோர்சிங் முறையில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வருடாந்திர செலவு ரூ.68 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தரமான நிறுவனங்களை தேர்வு செய்ய RFP (Request for Proposal) கோரி செயல்முறை மேற்கொள்ள மாமன்றம் அனுமதி வழங்கியது.

புதிய சாலை பணி

தூத்துக்குடி மூன்றாம் ரயில்வே கேட் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பழுதடைந்து அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதை சரிசெய்யவும், அந்த இடத்தில் உள்ள Machine Hole-ஐ அகற்றவும் ரயில்வே துறையிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.

இதற்காக 400MM விட்டம் கொண்ட Railway Crossing Trenchless Method-ல் புதிய கால்வாய் குழாய் அமைக்கும் பணியை ரூ.50.70 லட்சம் மதிப்பீட்டில் நகர நீர் மற்றும் வடிகால் நிதி 2025-26-ன் கீழ் மேற்கொள்ள மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இன்றைய மாமன்ற கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக