photo news by sunmugasuthram press club president
தூத்துக்குடி டிச31
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன மாதந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது.
ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில் மழையிலும் ,வெயிலிலும் மக்களுக்காக உழைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மானிய விலை வீட்டு மனை பட்டா கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது பின்பு ஆட்சி மாற்றம் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையில் இந்த விளம்பர மாடல் திமுக அரசு பதவியேற்றிலிருந்து முதலமைச்சர்ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதாராதாகிருஷ்ணன் தூத்துக்குடி எம். பி கனிமொழி என பல்வேறு தரப்பினாிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இதே மாநகராட்சி கூட்டத்தில் இது குறித்து பேசும்போது விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்த நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே பத்திரிகையாளருக்கு விரைவில் மானிய விலை வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மாணவர்கள் இளைஞர்கள் , பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக்கு செல்லும் பகுதி போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அருகில் உள்ள ராஜாஜி பார்க் வழியாக மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி வக்கீல் மந்திரமூர்த்தி பேசினாா்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக