தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி | ஜனவரி 1, 2026
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நடைப்பயிற்சி நண்பர்கள் சார்பில் 2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று பூங்காவில் சிறப்பான விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கேக் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நண்பர்கள், அனைவருக்கும் ஸ்வீட், காரம் மற்றும் காப்பி வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாக ராஜாஜி பூங்காவில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
இவ்விழாவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் தொழிலதிபர்கள் ரத்னா தர்மராஜ், பூக்கடை செல்வராஜ், நடராஜன், சுப்பையா, ஆறுமுகம், பாலசுப்பிரமணியம், முருகேசன், ஜான், வழக்கறிஞர்கள் செல்வக்குமார், வேல்முருகன், மாஸ்டர் தங்கராஜ், எல்.ஐ.சி முகவர்கள் கணேசன், கந்தசாமி, ஜெயக்குமார், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பால்ராஜ் உள்ளிட்ட ராமர், விக்னேஷ், சேகர், சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி புத்தாண்டை சமூக நலன் மற்றும் ஒற்றுமையுடன் தொடங்கியதாக அமைந்தது.

.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக