சனி, 27 டிசம்பர், 2025

விஜய் யார் கட்டுப்பாட்டில்? நடிகை திரிஷாவிடம் கேட்டால் ? திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் அதிரடி பேட்டி

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

விஜய் யார் கட்டுப்பாட்டில்? நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும் :
திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி


தூத்துக்குடி : டிச 27
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி என திமுக பிரமுகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை கூறினார்.



தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜயின் முன்னாள் மேலாளராக இருந்த பி.டி.செல்வக்குமார், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் கூறியதாவது :
திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், அனைத்து நலத்திட்டங்களும் திட்டமிட்டு அறிவிக்கப்பட்டு, முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்துவதால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பயனடைந்து வருகின்றனர். இதன் காரணமாகவே 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாய், தந்தையர்களைப் போல உழைத்த பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிவருகிறார். ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் தற்போது அவருடன் இல்லை. 


"தமிழக வெற்றிக்கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. பெண்களை ஏளனமாக பார்க்கும் போக்கு உள்ளது. கட்சியில் சில மாபியா கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக கட்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது".

"விஜய்க்கு பால் அபிஷேகம் செய்தவர்கள், அவருக்காக உழைத்தவர்கள் யாருக்கும் இன்று மரியாதை இல்லை. தூத்துக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் அவரை சந்திக்க முயன்றபோது, மூன்று நிமிடம் கூட ஒதுக்கி அவரது குறைகளை கேட்கவில்லை. அந்த சமயத்தில் பின்பக்கமாக ஏறி குதித்துப் போனவர் புஸ்ஸி ஆனந்த். இதன் தொடர்ச்சியாக அந்த பெண் தூக்க மாத்திரைகளை உட்கொண்ட சம்பவம் வருத்தமளிக்கிறது "





தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் விஜய் மீது அதிருப்தியில் உள்ளனர். அவரை சுற்றியிருப்பவர்களுக்கு பணம்தான் முக்கியமாக உள்ளது. விஜய் கண்ணும் கருத்துமாக செயல்படவில்லை.


ஒரு பெண் நேரில் வந்து சந்திக்க விரும்பும் போது கூட பார்க்காமல் செல்வது, அவர் யாரைத்தான் பார்ப்பார் என்ற கேள்வியை எழுப்புகிறது.

திமுகவை “தீய சக்தி” என கூறும் விஜய், உண்மையான தீய சக்தி யார் என்றால் அவர் தான். 200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததாக கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பு 100 கோடி ரூபாயையாவது பொதுமக்களுக்கு நலத்திட்டமாக வழங்கியுள்ளாரா? என கேள்வி எழுப்பினார்.



"சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஆறுகளை சுத்தப்படுத்த 15 கோடி ரூபாய் செலவில் செய்யலாம் என நான் கூறியபோதும், அதனை அவர் செய்யவில்லை. “விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதனை நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும் என பதிலளித்தார்."

தற்போது வரை பூத் கமிட்டிகள் வலுப்படுத்தப்படவில்லை. “ஜனநாயகன்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுவதால் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அங்கு சென்றுவிட்டனர். இதனால் எஸ்.ஐ.ஆர். வாக்காளர் சேர்க்கை முகாம்களில் கூட பணியாற்ற ஆட்கள் இல்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான்.

நடிகை சினேகா நமீதா!!!

நடிகை சினேகா, நமீதா, முன்பு சில்க் ஸ்மிதா வந்தபோது கூட்டம் திரண்டது போலவே நடிகர்கள் வந்தால் கூட்டம் திரள்வது இயல்பானது. இதைப் பார்த்து விஜய் முதலமைச்சராகிவிடலாம் என்ற மாயையில் இருக்கிறார். ஆனால் திமுக மக்கள் நலத் திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறது. விஜய் கட்சியில் வசூல் வேட்டை தான் நடைபெறுகிறது.


தற்போது 20 மாவட்ட செயலாளர்கள் என்னிடம் தொடர்பில் உள்ளனர். பொங்கலுக்குப் பிறகு அவர்களை திமுகவில் இணைக்கும் விழா நடைபெறும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஜூலை–ஆகஸ்ட் மாதங்களில் விஜய் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வார்.


 “ஜனநாயகன்” படம் வெளியீடும் போது ரூ.2000, ரூ.3000 கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதை தடுக்க, பிளாக் டிக்கெட் விற்கக்கூடாது என்று அவர் தைரியமாக அறிவிப்பு வெளியிடுவாரா? என்றார்.


கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததில் 39 பேர் பொதுமக்கள். 3 மணிக்கு வருவதாக கூறிவிட்டு 7 மணிக்கு வந்தது திட்டமிட்ட சதி. இதற்கான முழுப் பொறுப்பு விஜயைச் சாரும். 30 ஆண்டுகளாக அவருடன் பயணித்து அவரது வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் நானும் ஒருவன். என்னைப் போலவே பலரின் நிலை இன்று இப்படித்தான். அவரது கட்சியில் கட்டமைப்பும் இல்லை, நேர்மையும் இல்லை. இந்நிலையில் அவர் தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்த முடியாது. கூண்டுக்கிளியாக இருந்து கொண்டு வெளி உலகம் தெரியாமல் பேசிக்கொண்டு வருகிறார். 


மக்கள் அவரை யார் என்பதை நன்றாக அறிந்துள்ளனர். அது தேர்தல் நேரத்தில் வெளிப்படும். விஜய் ஒரு கிளாமர் தான். அவரை பார்த்து விட்டு செல்வார்களே தவிர, ஓட்டு போட மாட்டார்கள் என்றார்.

இந்த சந்திப்பின்போது நெல்லை கிழக்கு திமுக பொறியாளர் அணி செயலாளர் ஜோசப் சந்திரன், வக்கீல் பாலகிருஷ்ணன், ஏசுதாசன், டி.ராஜேந்தர் நற்பணி மன்ற நிர்வாகி சிம்பு கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

photo news by sunmugasuthram press club president 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக