வியாழன், 4 டிசம்பர், 2025

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா — 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்திகள்

தூத்துக்குடி 05 டிசம்பர் 2025

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா — 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை நிகழ்வு

மக்களால் நான்… மக்களுக்காகவே நான்…” என்று வாழ்ந்து காட்டிய தங்கத் தாரகை, முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தலைவி அம்மா ஜெ. ஜெயலலிதா அவரின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று (05.12.2025) நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.



காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கழகம் அலுவலகம் முன்பாகவும், பின்னர் தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் முன்பாகவும், புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா  திருவுருவப் படத்திற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.








நிகழ்வில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், பெண்கள் அணி, இளைஞர் அணி, ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு, புரட்சித்தலைவி அம்மாவின் அரசியல் சேவையும் மக்களுக்கான பெரும் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து மலரஞ்சலி சமர்ப்பித்தனர்.

வீடியோ பார்க்க 

தூத்துக்குடியில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த நினைவு அஞ்சலி நிகழ்வில், பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மாவிற்கு மரியாதை செலுத்தினர்.

செய்தி மற்றும் நிகழ்வு புகைப்படங்கள் 

ரோஜா அருணன் செய்தியாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக