தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, நவம்பர் 11:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2) ஆலோசனைக் கூட்டம் இன்று (11.11.2025) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மீனாட்சிபுரம் சோலை ஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் தலைமையேற்று முக்கிய உரையாற்றினார்.
தொகுதி முழுவதும் வாக்குச்சாவடி முகவர்கள் அதிக அளவில் பங்கேற்று, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அமைப்புத் திட்டங்கள், வாக்காளர் பட்டியல் சீராய்வு பணிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள், இளைஞர், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக