தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி நவ 3
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத்துறை சார்பில், “போதை இல்லாத இளைய சமுதாயம் 3.0” உருவாகிடும் நோக்குடன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அவர்களின் உத்தரவின்படி, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தாளமுத்து நகர், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) வி. கே. கல்யாணகுமார், தூத்துக்குடி கோட்டார் கலால் அலுவலர் தங்கையா, தமிழ்நாடு கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன் உள்ளிட்ட பல அலுவலர்கள் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாடு ஆட்டம், மயில் ஆட்டம், குதிரை ஆட்டம், கொக்கலி ஆட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்வின் மூலம் இளைய தலைமுறையில் போதைப்பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் நோக்கம் வலியுறுத்தப்பட்டது.
photo news by sunmugasuthram press club president

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக