திங்கள், 3 நவம்பர், 2025

SIR: வாக்காளர் பட்டியல் திருத்தமா? வாக்குரிமை பறிப்பா?

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு செய்தி

தூத்துக்குடி: நவ 4

சிறப்பு தீவிர மறு ஆய்வு (SIR - Special Intensive Revision) என்ற பெயரில் தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் மாற்றம், வெறும் திருத்தம் அல்ல, மாறாக குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மறைமுகமான நடைமுறையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கமான திருத்தம் அல்ல SIR

வழக்கமாக தேர்தல் ஆணையம் இறந்தவர்களை நீக்குதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் போன்ற சாதாரண திருத்தங்களைச் செய்யும். ஆனால் இப்போதைய SIR நடைமுறையில் தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய தற்போதைய வாக்காளர் பட்டியலே முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



அனைத்து வாக்காளர்களும் புதிய கணக்கெடுப்புப் படிவத்தை (Enumeration Form) நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை சமர்ப்பிக்காதவர்கள் தானாகவே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர்.

அதிகப்படியான விவரங்கள் கோரிக்கை

புதிய படிவத்தில் பின்வரும் விவரங்கள் கேட்கப்படுகின்றன:

பிறந்த தேதி

ஆதார் எண்

கைபேசி எண்

தந்தை/பாதுகாவலர் பெயர்

தாய் மற்றும் கணவர்/மனைவியின் EPIC எண்

2002ல் இருந்த உறவினர் பெயர் மற்றும் உறவு முறை

QR கோடு பொருத்தப்பட்ட இந்த படிவம் ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப்படும். நகல் எடுத்துப் பயன்படுத்த முடியாது.

நேர வரம்பு பெரும் சவால்???

நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை ஒரு மாத காலத்தில் 6.36 கோடி பேரிடம் இந்த படிவத்தை நிரப்பித்தரச் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதனால் குறைந்தது 1.5 கோடி வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு!!!!!

ஆதரவு

AIADMK உள்ளிட்ட BJP கூட்டணி கட்சிகள் இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றன. போலி வாக்குகளை நீக்குவதே SIR-ன் நோக்கம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

எதிர்ப்பு

DMK, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித்திட்டம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முக்கிய கேள்வி?

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த SIR நடைமுறை, வெறும் வாக்காளர் பட்டியல் திருத்தமா, அல்லது ஆளும் கட்சிக்கு வைக்கப்படும் அரசியல் செக்கா ??? என்பது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

"மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயக சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது"

- தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக