Tamil Nadu updates,
அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி ஓழுங்குமுறை விற்பனைக்கூடம் – ஏலம் மற்றும் புதிய வழிமுறை அறிவிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி உழவர் சந்தை வளாகத்தில் உள்ள சிறப்பு அரங்கில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஓழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெறவுள்ளது என தூத்துக்குடி ஓழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடைகள் ஏலம் !!!
அதனை தொடர்ந்து உழவர் சந்தை கடைகள் ஏலம் விடப்பட உள்ளது
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் டேவணித்தொகை ரூ.3000/-
செலுத்தவேண்டும் ஏலம் ஜாரி செய்யப்பட்ட நபர் கடைக்கான 6 மாதவாடகை தொகையை வைப்புத்தொகையாக ஏலம் முடிந்த உடன்செலுத்த வேண்டும்.
கடையை அலுவலகநேரத்தில் அணுகிபார்வையிடலாம். பார்வையிட கண்காணிப்பாளர் விருப்பமுள்ளவர்கள் அவர்களைநேரில்
திருநெல்வேலி விற்பனைக்குழுவினால் விதிக்கப்படும் இதர நிபந்தனைகள் மற்றும் வரன்முறைகளுக்கு வாடகைக்கு பயன்படுத்த வேண்டும். உட்பட்டே கடையை
ஏலத்தைஒத்திவைப்பது / நிராகரிப்பது அல்லது ஏலத்தை ஜாரி
செய்வதில் திருநெல்வேலி விற்பனைக்குழு செயலாளரின் முடிவே இறுதியானதாகும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட வியாபாரிகளும் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் வியாபாரிகள் தங்கள் கடை பாக்கி தொகை ரூ.3000 வரை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும், இதனைச் செலுத்தாத கடைகளுக்கு அடுத்த விற்பனையில் அனுமதி வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விற்பனைக்கூட வளாகத்தில் ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், வியாபாரிகள் ஒருவருடன் ஒருவர் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம், ஓழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
—
தூத்துக்குடி லீக்ஸ் செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக