புதன், 15 அக்டோபர், 2025

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் – 28 மனுக்கள் பெறப்பட்டது

Arunan journalist 


📰 தூத்துக்குடி லீக்ஸ்
🗓️ தேதி: 15 அக்டோபர் 2025
🗞️ மாவட்ட செய்திகள்


தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் – 28 மனுக்கள் பெறப்பட்டது

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று முடிந்தது. மாநகராட்சி மேயர் ஜெகன்  தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.

thoothukudileaks


மாநகராட்சி ஆணையர்  பிரியங்கா வழிகாட்டுதலின்படி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து, தீர்வுகளை வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

thoothukudileaks


அந்த அடிப்படையில், இன்று நடைபெற்ற மேற்கு மண்டல முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தமாக 28 மனுக்கள் பெறப்பட்டன. 


குடிநீர் சப்ளை, சாலைகளின் நிலை, கழிவு மேலாண்மை, தெருவிளக்குகள், தொற்று பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குறைகள் மனுக்களாக எழுப்பப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முகாமில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை மேயர் வழங்கினார்.

பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை நேரில் கேட்டு தீர்வு காணும் இந்த முயற்சி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக