திங்கள், 8 செப்டம்பர், 2025

பிரேக்கிங் நியூஸ் 🚨 ரேஷன் அரிசி கடத்தல் – பதுக்கல் விவகாரம் தமிழ்நாடு உணவு பொருள் பாதுகாப்பு இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் :

தமிழ்நாடு உணவு பொருள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், பெருமாள்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அமைப்பின் நிறுவனர், வழக்கறிஞர் மு.பேச்சிமுத்து பி.ஏ., பி.எல்., தெரிவித்தார்.

Thoothukudileaks


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:

  1. திமுக முக்கிய புள்ளி ஒருவர் நவீன அரிசி ஆலையை பதுக்கல் குடோன்களாக மாற்றி, ரேஷன் அரிசியை கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தி வருவதாக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுக்கள் மீது உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

  2. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, தரமான அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் வலியுறுத்தல்.

  3. கேரளாவிற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசியை பதுக்கி கள்ள சந்தையில் விற்பனை செய்து வரும் அனைத்து நவீன அரிசி ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  4. நவீன அரிசி ஆலைகள் முன்பாக காவல்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட வேண்டும்.

  5. அனைத்து நவீன அரிசி ஆலைகள் முன்பாகவும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும்.

  6. ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் சட்டவிரோத பிரச்சனைகளைத் தடுக்க வேண்டியது அவசியம்.

  7. இரவு நேரங்களில் அரிசி ஆலைகளுக்கு காவல்துறை ரோந்து அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும்.

மேலும், கண்டன ஆர்ப்பாட்டத் தேதியை விரைவில் அறிவிப்பதோடு, அதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும், நடைபெற இருக்கும் ஜனநாயக சட்டப் போராட்டத்தில் இயக்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

– தூத்துக்குடி லீக்ஸ்


👉 புகைப்படம் மாதிரி ஒவியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக