தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில், வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

சால்வை போர்த்தி போது ...!!! 
அதற்கு முன்..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியதோடு, தமிழர்களின் வரலாறு மற்றும் சுயமரியாதை கொள்கைகளை உலக அரங்கில் பதிவு செய்தார்.
அத்துடன், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மூலம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் மிகப்பெரும் சாதனையை எட்டினார்.
இந்த வெற்றிகரமான பயணத்திற்குப் பின் தாயகம் திரும்பிய முதலமைச்சரை, அமைச்சர் கீதா ஜீவன் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
– தூத்துக்குடி லீக்ஸ்
👉 news by sunmugasuthram press club president
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக