திங்கள், 8 செப்டம்பர், 2025

அனல் மின் நிலைய நிர்வாக சீர்கேடு – திமுக மிரட்டலை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் – முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

தூத்துக்குடி : செப் 8

தூத்துக்குடியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் நிர்வாக சீர்கேடு, ஊழல், அதிகாரிகளின் மெத்தனப் போக்கு மற்றும் ஆளும் திமுகவின் அராஜகம் குறித்து அதிமுக சார்பில் விரைவில் பெருமளவு மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:


நான்காண்டுகளாக திமுகவின் அராஜக ஆட்சியில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் முற்றிலும் செயலிழந்து விட்டது. 

ஊழல் தலைவிரித்தாடுகிறது!!!

அதிகாரிகள் மத்தியில் ஊழல் பரவலாக உள்ளது. சமீபத்தில் ஒரு ஒப்பந்ததாரர் குறைந்த விலையில் டெண்டர் கோரியதற்காக, திமுக நிர்வாகிகள் உயரதிகாரிகள் துணையுடன் அவரது வீட்டுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 


"காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது".

மேலும், சமீபத்தில் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுதடைந்த இரண்டு அலகுகளை மறுகட்டமைக்க 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திமுகவின் முக்கிய புள்ளிகளின் பினாமிகள் அராஜகம் செய்து, மின் நிலைய நிர்வாகத்தையும் முடக்கி அரசுக்கு கோடிக்கணக்கான இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.



 இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகளிலும் நிர்வாக சீர்கேடு, ஊழல், அத்துமீறல் பரவலாக உள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு ஆளாகிறார்கள்.

போராட்டம்!!!

இந்த திமுக அராஜகத்தை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  அனுமதி பெற்று, மிகப்பெரிய அளவில் போராட்டம் விரைவில் நடத்தப்படும்,” என சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் அகஸ்டின், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் அசன், சங்கர், பேச்சியப்பன், ராஜேந்திரன், கணி, ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


news by sunmugasuthram press club president 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக