செவ்வாய், 9 செப்டம்பர், 2025

தூத்துக்குடி வடபாகம் கொலை வழக்கில் இருவருக்கு தலா ஆயுள் தண்டனை இந்த ஆண்டு 18வது கொலை வழக்கு தீர்ப்பு

🔴 BREAKING NEWS

📰 தூத்துக்குடி லீக்ஸ் (Daily News)

தூத்துக்குடி மாவட்டம் : 09.09.2025

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகளான இருவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராதம் விதித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II இன்று (09.09.2025) தீர்ப்பு வழங்கியது.

Thoothukudileaks
Karuppasamy-Chinna thambi


திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி (எ) மட்டி மகன் முனியசாமி (70/2022) என்பவரை, குடும்ப பிரச்சினை காரணமாக 17.06.2022 அன்று திரேஸ்புரம் பகுதியில் வைத்து கொலை செய்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினரான சின்னத்தம்பி (32/2025) மற்றும் அவரது நண்பரான கருப்பசாமி (24/2025) ஆகியோரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கு,  நீதிபதி  பீரித்தா  முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தலா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம், மேலும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பாராட்டி உள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 18 கொலை வழக்குகளில் குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக