சனி, 6 செப்டம்பர், 2025

தூத்துக்குடியில் காவலர் தினம் உறுதிமொழி, மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பேரணி

👇Tamil Nadu updates photo news by Arunan journalist 


தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் : 06.09.2025

காவலர் தினம் உறுதிமொழி, மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பேரணியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது

1859ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 

அந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்  சட்டமன்றத்தில் அறிவித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6ஆம் தேதி “காவலர் தினம்” ஆகக் கொண்டாடப்படுகிறது. 



அதன்படி இன்று (06.09.2025) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவலர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.



தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தலைமையில், வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் முதலில் காவல்துறையினர் உறுதிமொழி ஏற்றனர். 

பிறகு அங்கு நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில், 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர். காவலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாமும் மரக்கன்றுகளை நட்டார்.



இதனைத் தொடர்ந்து, காவல்துறை விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பாக இருந்து கொடியசைத்து தொடக்கி வைத்தார். 



இதில் 14 நான்கு சக்கர வாகனங்களும், 15 இருசக்கர காவல்துறை வாகனங்களும் பங்கேற்று நகரமுழுவதும் விழிப்புணர்வு பரப்பின.

மேற்படி நிகழ்வுகளில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள்  ஆறுமுகம், . தீபு, நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி.மதன் இ.கா.ப, ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சுதிர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவல்துறையின் சேவையைப் போற்றும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வுகள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக