பத்து நிமிடத்தில்...தீர்ந்தது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் பிரச்சனை – அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி நடவடிக்கை!
பொதுமக்கள் பயணிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துநர் மகிழ்ச்சி
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்காக மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.
ஆனால், சில சுயநல தனிநபர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் துணையுடன் இக்குழாய்களை அடைத்து வைத்ததால் பொதுமக்கள், பயணிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானனர்.
இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் தரப்பில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன்அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
தகவல் சென்ற பத்து நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, அடைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களை திறந்து வைத்தனர்.
அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், பேருந்து பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
![]() |
| இப்போது... |
![]() |
| முன்பு |
"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிச்சல் பட்டு புலம்பியபடி அங்கு இருந்து கிளம்பி சென்றனர்
முன்பு அமைச்சர் திறந்த வைத்த நுழைவு வாயில் உள்ள குடிநீர் குழாய் சரி பண்ணாமல் சென்றனர்.
இந்த மாதிரி அரசு அலுவலர்கள் தங்கள் கடமையை செய்ய மறுப்பவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் வேண்டு கோள்"

.png)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக