தூத்துக்குடி, செப்டம்பர் 24:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைக்கிணங்க, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாகம் வாரியாக அதிமுக பூத் மற்றும் கிளை நிர்வாகிகளை ஆன்லைனில் ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையேற்றார்.
தொழில்நுட்பத்தை தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்தலைமையுரை ஆற்றிய எஸ்.பி. சண்முகநாதன், "தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரை தேர்தல் காலத்தில் பரிமாறக்கூடிய முக்கிய வலுவாக மாற்ற வேண்டும்.
2026 தேர்தலில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை பெரும்பான்மையுடன் வெல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திமுக அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துரைத்து, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வழியில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியை நிறுவ வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
கலந்து கொண்டோர்
கூட்டத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் திருநெல்வேலி மண்டல பொருளாளர் விஜயவேல், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மதன், பொருளாளர் அசோக்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, பல்வேறு சார்பு அணித் தலைவர்கள், ஒன்றிய, நகர மற்றும் பகுதி கழக செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் ஒருங்கிணைப்பில், ஐடி விங் அதிகாரிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விரைவில் ஆன்லைன் பயிற்சி பட்டறைகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக