ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடியில் முதியோருக்கு செவித்திறன் கருவி வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

Tamil Nadu updates 

photo news by sunmugasuthram press club president 

👉 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்

தூத்துக்குடி, ஆக.18
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் வழியாக பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு அதற்கு நடவடிக்கை எடுக்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டைச் சேர்ந்த சந்தனராஜ் என்பவர் தன்னுடைய செவித்திறன் குறைபாட்டினால் புதிய செவித்திறன் கருவி வேண்டுமென மனு அளித்திருந்தார். 



இதுகுறித்து விசாரித்த போது, முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி  காலத்தில் இதேபோன்ற கருவி வழங்கப்பட்டதாகவும், அது தற்போது செயலிழந்துவிட்டதாகவும் சந்தனராஜ் தெரிவித்தார்.


அந்த கோரிக்கையை அடுத்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், தனது சொந்த நிதியிலிருந்து புதிய செவித்திறன் கருவியை சந்தனராஜ் -க்கு வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புகைப்படம் மாதிரி ஒவியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக