திங்கள், 18 ஆகஸ்ட், 2025

சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட பரதர் குல தென்னாட்டு வேங்கை தியாகி பெஞ்சமின் வீரதீர வரலாறு

மறைக்கப்பட்ட தென்னாட்டு வேங்கை தியாகி A.S. பெஞ்சமின் –

ஐயா ஆசியுடன்...

கட்டுரையாக்கம்

சு.அருணன் செய்தியாளர் 

சீனியர் ரிப்போர்ட்டர் (வார இதழ்)

தூத்துக்குடி 


இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல வீரர்களின் பெயர்கள் தங்க எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. 

ஆனால் சிலர் போராட்டத் தீபமாக எரிந்து கொண்டிருந்தும், அதிகாரப்பூர்வ வரலாற்றில் மறைக்கப்பட்டு போய்விட்டனர். அப்படிப்பட்ட மறைக்கப்பட்ட ‘விடுதலை வீரர்’, “தென்னாட்டு வேங்கை” என்று புகழப்பட்டவர் தியாகி A.S. பெஞ்சமின்.




thoothukudileaks
தென்னாட்டு வேங்கை தியாகி பெஞ்சமின் புகைப்படம் 


 பிறப்பு !!!

தென் தமிழகத்தில் கடைக்கோடியில்

தூத்துக்குடி அருகே உள்ள கடற்கரை கிராமம் ஆலந்தலை எனும்

கிராமத்தில் பரதவர் குடும்பத்தில்

சூசை எஸ்தேவு - சூசை மாதவடியாள்

தம்பதியருக்கு மகனாக 23 ஆகஸ்ட் 1919ம் வருடம் பெஞ்சமின் பிறந்தார்.


மாணவ பருவமே தொடக்க போராட்டம் 


எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவர் மாணவப் பருவத்திலேயே  ஆங்கிலலேயர் எதிர்ப்பின் காரணமாக சுதந்திரக் களத்தில் குதித்தார். 


ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக, - நீலன் சிலை தகர்ப்பு,  போராட்டம் முலமாக போராட்ட தளபதி  சோமயா ஜுலு - பசும்பொன் முத்துராமலிங்க தேவருடன் இணைந்து பங்கேற்றார்.

அப்போது இந்திய மக்களை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் ஆட்சி கொடுங்கோலாக சென்று கொண்டிருந்தது. 

பாரத மாதா தேசிய வாலிபர் சங்கம் நிறுவிய பெஞ்சமின் 

ஏழு பொய் வழக்குகள்!!!

பெஞ்சமின் ஆலந்தலையில் சத்யாகிரகம் செய்திட திருச்செந்தூர்

காவல்துறையினர் கைது செய்து பெஞ்சமின் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அந்த தண்டனை முடிந்து திரும்பி வந்த பெஞ்சமின் பாரதமாதா தேசிய வாலிபர் சங்கம் ஒன்றை ஆலந்தலையில் நிறுவினார்.


அதன் பின்னர் ஏழு பொய் வழக்குகள் போடப்பட்டு மீண்டும் தூத்துக்குடி சப்-ஜெயிலில் பெஞ்சமின் அடைக்கப்பட்டார்.


ஆங்கிலயே 👮 காவலர்களல் கட்டி வைத்து அடித்து துவைக்க பட்டு ஆலந்தலையில் இருந்து.. துரத்தப்பட்ட சம்பவம் 

அப்போது ஆங்கிலேயே அதிகாரிகள் பாரதமாதா வாலிப சங்கத்தை சேர்ந்த

பெஞ்சமின் ஆதரவாளர்கள் சுமார் 50 குடும்பங்களை ஆலந்தலை கிராமத்தை விட்டு உறவினர்களை உடுத்திய ஆடைகளுடன் துரத்தி அடித்தார்கள். 


அவர்கள் வேறுவழியின்றி திருச்செந்தூர் கடற்பகுதிக்கு வந்து தங்கினார்கள்.

இந்த தகவல் தெரியாமல்....

தூத்துக்குடி சிறையிலிருந்து விடுதலையாகி ஆலந்தலை கிராமத்திற்கு பெஞ்சமின்

செல்ல அங்கே காத்திருந்த ஆங்கிலேயே அதிகாரிகள் இவரை அடித்து தாக்க வந்ததும் அவர்களிடமிருந்து லாவகமாக தப்பி திருச்செந்தூர் வந்து சேர்ந்தார்.




இதனால் முன்பிலும் தீவிரமாக ஏகாதிபத்திய ஆங்கிலேயே அரசுக்கு எதிராக பெஞ்சமின் ஈடுபட்டார். 

திருச்செந்தூர் பகுதியில்

#தந்தி #கம்பி #அறுத்தல், #தபால் #நிலையங்களுக்கு #தீ வைத்தல் என துணிந்து போராட்டம் செய்தார் பெஞ்சமின். 

இப்படியே  தூத்துக்குடி -மதுரை சிறைச்சாலைக்கு பலமுறை அனுப்பப்பட்டார்.

லோன் துரை கொலை !!!

அப்போது திருச்செந்தூர் சுற்றி உள்ள ஊர்களில் தனது கட்டுபாட்டில் சுதந்திர போராட்டகாரர்களை அடக்கி ஒடுக்குவதில் மிக தீவிரமாக இருந்தவர் ஆங்கிலேயே அதிகாரியான வில்ப்ரட்

(வில்லி) லோன், உப்பு உதவி ஆய்வாளர்

இவரது அத்து மீறிய அராஜகத்தை பொறுக்க முடியாமல்..சுதந்திர போராட்ட வீரர்கள் குறி வைத்தார்கள். 


அதற்காக பெஞ்சமின் அவரது நண்பர்களான ஆறுமுகநேரி ராஜகோபால், காசிராஜன் ஆகிய மூவரும் திருச்செந்தூரில் சந்தித்து ரகசிய திட்டம் தீட்டினர்.



குலசை காட்டு பங்களாவில்..

லோன் துரை- காதல் உல்லாசம்!!!


 'லோன் துரை'  குலசை என அழைக்கப்படும் குலசேகரபட்டினத்தில்

சீனி ஆலைக்கு அருகே அமைந்திருக்கும் காட்டு பங்களாவிற்கு  தனது அன்புகுரியவளை (காதலியை)

சந்திக்க நள்ளிரவில் அவ்வழியாக வருவார் என தகவல் கிடைத்தது.


அதன்படி 19-08-1941 அன்று பெஞ்சமின் -ராஜகோபால் - காசிராஜன் ஆகிய மூவரும்

குலசையில் உள்ள சீனி ஆலை பின்புறம் பகல் பொழுதினிலே வந்து மறைந்து கொண்டனர்.


நள்ளிரவு நெருங்கியதும் லோன்

துறை இரு காவலர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

உடனே ஆயுதங்களுடன் மூவரும் தாக்க முன்தோன்றியதும் உடன் வந்த காவலர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.


உதவி ஆய்வாளராக  இருந்ததால் லோன் துரை தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட முயன்ற போது அதை பலமாக ஒங்கி தட்டி விட்டு தாக்கினார் பெஞ்சமின்.



உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்... லோன்துரையும் தப்பி ஓட முயன்றார். இரவு நேர கும்மிருட்டில் தப்பிக்க விடாமல் தங்கள் கையில்

இருந்த அரிவாள் கத்தியுடன்

விரட்டி பிடித்து சீனி ஆலை முன்பாக

ஆங்கிலேயே அதிகாரியான லோன் துரையை மூவரும் வெட்டி கொன்றார்கள்.



"எம் மக்களை அடிமைப்படுத்த

நினைப்பவனுக்கு  இதுதான் கதி...

ஜெய்ஹிந்த்"

என முழக்கமிட்ட அவர் தப்பிச் சென்ற சம்பவம் ஆங்கிலேய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

thoothukudileaks


லோன் துரை கொலை ஆங்கிலேய

ஆட்சி அதிகாரிகள் மத்தியில் பெரும் திகிலை அடைய வைத்தது. 


இதே கால கட்டத்தில் தான்...

தூத்துக்குடி மணியாச்சி இரயில்வே நிலையத்தில்

கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன்

என்ற சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கியால்

சுட்டு கொன்று, தானும்

இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.


 லோன் துரை கொலை வழக்கு கைது – சித்ரவதை – மூன்று ஆயுள் தண்டனை !!!

லோன் துரை கொலை பின்னர் 

 பன்னம்பாறை காட்டுப்பகுதியில் பெஞ்சமின் தனது கூட்டாளிகள் உடன் பதுங்கி இருந்ததை..

 24-08-1942 அன்று 

துப்பு துலக்கி தீவிரமாக தேடிய  ஆங்கிலேயே காவல்துறை பன்னம்பாறை காட்டுக்குள் உட்புகுந்து அங்கே மறைந்திருந்த

பெஞ்சமின் -மற்றும் அவரது கூட்டாளியான ராஜகோபால் -

காசிராஜன் ஆகிய மூவரையும்

கைது செய்து அடித்து இழுத்து வந்தது.


காவல்துறையின் சித்ரவதைகளை தாங்கமாட்டாமல் துடித்தார்கள்.

பெஞ்சமினின் கை மற்றும் கால்களில் உள்ள  அனைத்து நகங்களையும் ஒவ்வொன்றாக....

பிய்த்து எறிந்தார்கள். 

முதலில் 11 மாதங்கள்

சிறையில் இருந்தார் பெஞ்சமின்.

இவ்வழக்கில் .

பெஞ்சமினுக்கு ஆதரவாக...

மூதறிஞர் ராஜாஜியும் அவரது உதவியாளரும் வழக்கறிஞர்களாக வாதாடினார்கள்.

6-2-1943 அன்று நெல்லை செசன்ஸ்

ஸ்பெசல் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன்

அவசரகால குற்ற தண்டனை அதிகரிப்பு சட்டங்களின் படி 3 ஆயுள் தண்டனை, அதாவது 63 ஆண்டுகள்

குற்றவாளி பெஞ்சமின்

சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

ஆந்திராவில் அலிப்புரம் சிறையில் !!!

பெஞ்சமின் தமிழகத்தில் இருந்தால்

எப்படியாவது தப்பிவிடுவார் என

ஆந்திரா மாநிலம் அலிப்புரம்

சிறைக்கு பெஞ்சமின்

கொண்டு செல்லப்பட்டு அங்கே இந்தியாவின்

முதல் ஜனாதிபதியாக பின்னாளில் இருந்த

பாபு ராஜேந்திர பிரசாத் உடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெஞ்சமின் தந்தை மரணம்!!!!

பெஞ்சமின் சிறையில் இருந்த

போது அவரது தந்தையார்

சூசை எஸ்தேவு இறந்து போனார்.

அவரது இறுதி சடங்கில்

கலந்து கொள்ள அன்றைய ஆங்கில அரசு மறுத்துவிட்டது. கலங்கினார் பெஞ்சமின்.


இந்தியா சுதந்திரம் தேச போராளிகள் விடுதலை !!!

பின்பு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும்

சிறையில் வாடிய அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.பெஞ்சமின் சுதந்திர காற்றை சுவாசிக்க வெளிவந்தார்.

விடுதலையின் பின் – சமூகப் பணிகள்

மும்பையில்  பெஞ்சமின் காலனி!!!

அதன் பின்பும் தியாகி பெஞ்சமின்

போராட்டம் தொடர்ந்தது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நிஷாமுர்தின்

இரயில்வே ஸ்டேஷன் அருகில் பிழைப்பு தேடி வந்த  தமிழர்கள் குடியிருப்பு ஆயிரக்கணக்கில் இருந்தது.


அவற்றை அப்புறப்படுத்த முயன்றனர்.

அதை கண்டு கொதித்து போன

தியாகி பெஞ்சமின் அனைவரையும்

ஒன்று திரட்டி போராட்ட களத்தில் இறங்கி,தமிழர்களுக்கு அந்த இடத்தை திரும்ப கிடைக்க செய்தார்.


ஆதலால் அப்பகுதியை 'தியாகி பெஞ்சமின் காலனி'

என பெயர் வைத்து இன்றளவும்

இருந்து வருகிறது.


அமலி நகர் 

பெயர் வைப்பதற்கு காரணகர்த்தா தியாகி பெஞ்சமின் தான் 

அதேபோல், திருச்செந்தூர் கடற்கரை பகுதியில்

அரசு குடியிருப்புக்காக 9 ஏக்கர் 25 செண்ட் ஒதுக்கி வைத்ததும், அதற்கு ஆங்கில வைசிராய் கான்வன்துரை நினைவாக 'கான்மாநகர்'

பெயரில் இருந்ததும்

அதை மாற்றி 'அமலிநகர்' என மறுபெயர்

வைக்கவும் பெஞ்சமின் காரணமானார்.


அமலிநகர் அருகே பெஞ்சமின் காலனி !!!

அடுத்து அமலிநகர் அருகே வறுமையில் உள்ள தூய்மை பணியாளர் கள் மக்களுக்காக தியாகி பெஞ்சமின்

சொந்தமாக

நிலத்தை வாங்கி கொடுத்தார்.

அதற்கும் பெஞ்சமின்

காலனி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.



திருச்செந்தூர் பேருந்து நிலையம் பகத் சிங் பெயர் வைக்க காரணகர்த்தா தியாகி பெஞ்சமின் தான்!!!

திருச்செந்தூர் பகுதியில் பஸ் நிலையம் கட்டுமான பணி முடிந்ததும் அப்பகுதியில் உள்ள பணம் செல்வாக்கு படைத்த ஒருவர் பெயரை வைக்க ஒரு கும்பல் துடித்தது 

மறுநாள் பெயர் பலகையை வைத்து விட ...

பெயர் பலகையில் அவரது பெயரும் எழுதி தயாராக இருந்தது 

தகுதியே இல்லாத அவரின் பெயரை வைக்க கம்யூனிஸ்ட் மற்றும் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் உடன் பாடு இல்லாமல் வெறுத்து போன நிலையில்... 

விஷயம் அறிந்தார் தியாகி பெஞ்சமின் 

உடனே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரிடம் டிரக்கால் முலம் தொடர்பு கொண்டு பேசினார் பெஞ்சமின்.

பிரதமர் அலுவலகம்  இருந்து தகவல் உத்தரவு பறந்து வந்தது  தூத்துக்குடி மாவட்டம் கலெக்டர் காவல்துறை அதிகாரிகள் குவிந்து பரபரப்பாக நடவடிக்கை எடுத்தார்கள் 


அங்கு திருச்செந்தூர் பேருந்து நிலையம் நுழைவு வாயில் ஏற்பாடாகி ஒருவர் பெயர் எழுதி பணி நடந்து  இருந்ததை இரவோடு இரவாக தூக்கி எறிந்து அகற்றப்பட்டு சுதந்திர போராட்ட மாபெரும் போராளியான பகத் சிங் பெயர் எழுதி வைத்தார்கள்.


இதனால் அப்போது சிங்கப்பூர் திருடன் என்று பலரால் அழைக்கப்பட்ட அவரின் பெயர் வைக்க முடியாமல் முக்குடைந்து போனார்களாம்.

இன்றளவும் திருச்செந்தூர் பேருந்து நிலையம் பகத் சிங் பேருந்து நிலையம் என்று தான் நுழைவு வாயில் உள்ளது.

அப்போது ஆளும் கட்சி பிரதமர் இந்திரா காந்தி முதல்வர் காமராசர் அவர்களிடம் இருந்த தொடர்பில் தியாகி பெஞ்சமின் நினைத்திருந்தால்? திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்கு பெஞ்சமின் அவர் பெயர் கூட வைத்து இருக்கலாம் ஆனால் ?அவர் விரும்பவில்லை..

தமிழர்களின் வள்ளல் மற்றும் தாதா வாக் மும்பை மில் வலம் வந்த வரதராஜ முதலியார் -உடன் பெஞ்சமின் நெருக்கமான நட்பு

அடுத்து மும்பையில் தமிழ் சங்கம்

வைத்து தமிழர்களுக்கு பாதுகாப்பு உதவி செய்து வந்த முதலியார் பெஞ்சமினின் நெருங்கிய நண்பராவார். 

புகைப்படம் மாதிரி ஒவியம் 


அதனால் மும்பைக்கு பெஞ்சமின் அவரை சந்திக்க அடிக்கடி செல்வதுண்டு. 

ஒரு சமயம் காங்கிரஸ்

அரசியல்வாதியான கருப்பையா முப்பனார். 

மும்பையில் தமிழருக்கு எதிரான 50 பேர்கொண்ட கலவரகாரர்களிடம் அகப்பட்டு கொண்டார்.

அப்போது பெஞ்சமின் ஒருவர் 

மட்டுமே இருந்து எதிரிகளை அடித்து துரத்தி முப்பனார் உயிரை காப்பாற்றினார். 

இந்த சம்பவத்தை முப்பனார் தியாகி பெஞ்சமின் இறப்புக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆக காமராஜர் உடன் அவரை பெயர் சொல்லி அழைக்கும் தீரா நட்பு கொண்டு இருந்தார் 

தமிழக முதலமைச்சர் ஆன பிறகும் காமராஜர் திருச்செந்தூர் வந்தால் வேற எங்கேயும் உணவு சாப்பிட மாட்டார் நேராக காரை பெஞ்சமின் வீட்டு விடு என சொல்லி வந்து பெஞ்சமின் அவருடன் பேசியபடி மீன் சாப்பாடு விருந்து களைகட்டுமாம்.

இலங்கை யில் பெஞ்சமின் !!!

தியாகி பெஞ்சமின் 1953களில்

இலங்கைக்கு சென்றிருக்கிறார்.

அங்கே அவருக்கு யாழ்பாணம் தமிழ் சங்கம் சிறப்பு வரவேற்புடன் பரிசளித்திருக்கிறது. 

விடுதலை புலிகள் மேல் பாசம் காட்டிய தியாகி பெஞ்சமின்!!!

1953 ம் ஆண்டு பெஞ்சமின் இலங்கை சென்றிருந்தார் அப்போது அவருக்கு சிறப்பாக வரவேற்பு  அளிக்கப்பட்டது.




thoothukudileaks
வீர கேசரி (நாளிதழ்)

யாழ் பானத்தில் நடந்த நிகழ்ச்சியை அங்கு வெளியாகும் வீரகேசரி நாளிதழில் தியாகி பெஞ்சமின் பற்றிய செய்தியும் பிரசுரம் செய்து இருந்தனர் 

எப்போதும் ஈழ தமிழர் மீது தனிப்பிரியம் கொண்டிருந்தார். 

தேசபற்றோடு தமிழ்பற்றும் மேலோங்கி இருந்த தியாகி பெஞ்சமின்...

தனது கடைசி காலத்தில் ஈழ தமிழர்களின் கண்ணீரையும், துயரத்தையும் அறிந்து தீரா வேதனையில் இருந்தார்.

Video 

தியாகி பெஞ்சமின் இறப்பு!!!!

17.01.1999 அன்று நோய்வாய்ப்பட்டு இறந்தார். இவருக்கு அமலி நகரில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

 அமலி நகர் கல்லறைத் தோட்டத்தில் தியாகி பெஞ்சமின்  கல்லறை உள்ளது. 

அவரது துணைவியார் பெட்லா பெஞ்சமின் சமீபத்தில் இறந்தார்.

👉 தியாகி பெஞ்சமின் – தமிழ்நாட்டின் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்.

அவரது வாழ்க்கை சுவடுகள் நமக்குச் சொல்லுவது: “உண்மையான வீரர், தன் உயிரை அர்ப்பணித்தாலும், மக்களின் உரிமைக்காகப் போராடுவார்!”

ரோஜா அருணன் ✍️

தூத்துக்குடி லீக்ஸ்

கட்டுரை தகவல் புகைப்பட உதவி 

பெ. அசோகன் 

த/பெ தியாகி பெஞ்சமின் 

செய்தி யில் இடம் பெறும் புகைப்படம் பயன் படுத்த விரும்புவோர் யாராயினும் இவரின் அனுமதி பெற்று பயன் படுத்தவும் 


---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக