திங்கள், 18 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி மோப்பநாய் படைக்கு வெண்கல பதக்கம்

 #மாநில அளவிலான காவல்துறை பணித்திறன் போட்டியில் தூத்துக்குடி மோப்பநாய் படைக்கு வெண்கல பதக்கம்

## மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு மாவட்ட SP பாராட்டு

தூத்துக்குடி, ஆகஸ்ட் 18:** மாநில அளவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான பணித்திறன் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த தூத்துக்குடி மோப்பநாய் படை பிரிவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  பாராட்டு தெரிவித்துள்ளார்.


காவல் மோப்பநாய் படை பிரிவு போட்டி!!!

சென்னை ஆவடி பட்டாலியனில் கடந்த ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற மாநில அளவிலான பணித்திறன் போட்டியில் பல்வேறு பிரிவுகள் பங்கேற்றன. 


இதில் காவல் மோப்பநாய் படை பிரிவு (Dog Squad), வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயல்இழப்பு பிரிவு (BDDS), சிசிடிஎன்எஸ் பிரிவு (CCTNS) ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன.



தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படைப்பிரிவு காவல்துறையினர் மற்றும் துப்பறியும் மோப்பநாய் ஜூனோ, 'கிரைம் ட்ராக்கர்' (Crime Tracker) என்னும் செயல்திறன் போட்டியில் சிறந்த நுணுக்கத்துடன் செயல்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.


இந்த வெற்றிக்காக இன்று (ஆகஸ்ட் 18) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற மோப்பநாய் ஜூனோவைப் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான், மோப்பநாய்க்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து போட்டியில் வெற்றிபெற்ற காவல்துறையினரைப் பாராட்டி வாழ்த்துக் கூறினார்.


இந்த வெற்றி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் தொழில்முறை திறமையையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.


---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக