ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடியில் விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

Tamil Nadu update Photo news

 by Arunan journalist 

தூத்துக்குடி, ஆக.18

தூத்துக்குடி மாவட்ட விலங்கு நல அமைப்பு சார்பில் நேற்று (17.8.2025) மாலை 5 மணியளவில் 12வது வாசல் மையவாடி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




இந்த ஆர்ப்பாட்டத்தில், சமீபத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தெருநாய்களை அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.




உச்சநீதிமன்றம், இந்தியா முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட இடங்களில் அடைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டது. 


அதனைத் தொடர்ந்து தமிழக உயர்நீதிமன்றமும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

தூத்துக்குடியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,....








thoothukudileaks

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெருநாய்களை அடைத்து வைப்பது நடைமுறைக்கு மாறானது என்றும், அவற்றிற்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது என்றும் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு கார்த்திக் பிரபாகரன் தலைமை தாங்கினார். விலங்கு நல ஆர்வலர்கள் பிரகாஷ், ஹார்ட்லி, சரவணசெல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வீடியோ பார்க்க 

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விலங்கு நல ஆர்வலர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

thoothukudileaks
பஸ்ஸ்டாண்ட் 🐶 நாய் 
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக