Tamil Nadu updates, photo news by Arunan journalist
📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, 2025 ஆகஸ்ட் 17 –
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம், தூத்துக்குடி மாநகரகிளையின் 36வது பொதுக்குழு கூட்டம், ஜார்ஜ் ரோட்டிலுள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டம் மாநகர தலைவர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சேவியர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் துணைத்தலைவர் மேரி, செயற்குழு உறுப்பினர் ராஜமணி, ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி சங்கரலிங்கம், அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனந்தன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன், HWP ஓய்வு பெற்ற அலுவலர் ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.
இறுதியில் செயற்குழு உறுப்பினர் வள்ளி நன்றியுரை ஆற்றினார்.
கூட்ட ஏற்பாடுகளை சங்க அலுவலர் சங்கீதா ரமேஷ் சிறப்பாக செய்திருந்தார்.
📸 புகைப்படம் மாதிரி ஒவியம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக