ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி 15நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கா விடில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் பரபரப்பு அறிக்கை வெளியுள்ளார் 


📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் – சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள்: பொதுமக்கள் கோபம்! 

தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையரிடம், புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர்  மா. மாரிச்செல்வம்  1.8.2025 அன்று மனு அளித்துள்ளார்.


அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் ஜங்ஷனில் இருந்து துறைமுகம் செல்லும் சாலையில் தினசரி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை போன்று ???

  • பன்றி, மாட்டு, கோழி இறைச்சி வியாபாரக் கடைகள்
  • பலசரக்கு கடைகள்
  • சிமெண்டு, உரம், பழைய இரும்பு, துணி கடைகள்
  • ஹோட்டல், டிபன், டீக்கடைகள்
  • வாகன பஞ்சர், வெல்டிங் தொழில் கடைகள்

என பல்வேறு வணிக நடவடிக்கைகள் சாலையோரத்தில் நடைபெறுவதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சாலை விபத்து - உயிரிழப்பு!!!

சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் விபத்துகள் நிகழ்ந்து, பலர் உயிரிழந்தும் சிலர் படுகாயமடைந்தும் உள்ளனர். 

thoothukudileaks


முற்றுகை போராட்டம் 

மேலும், சுகாதாரக் கேடு காரணமாக பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ...

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


📷 
புகைப்படங்கள் மாடல் ஒவியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக