வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

தூத்துக்குடியில் எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வார விழா

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 


தூத்துக்குடியில் எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வார விழா: முதியோர்களுக்கான சிறப்பு கவனம்

தூத்துக்குடி லீக்ஸ்: ஆகஸ்ட் 8
எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


இவ்விழாவை முன்னிட்டு, மாநிலத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மணிகண்டன், மாநில இணைச் செயலாளர் டாக்டர் மாரிமுத்து, தெற்கு மண்டலச் செயலாளர் டாக்டர் பாலக்கண்ணன், நெல்லை ஆர்த்தோ கிளப் உறுப்பினர்கள் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் மற்றும் டாக்டர் மகிழ்ஜீவன் ஆகியோர், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்தனர்.

thoothukudileaks

2025-ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் கருப்பொருளான “முதியோருக்கான முழுமையான பராமரிப்பு” அடிப்படையில், முதியோருக்கான தனி சிகிச்சை பிரிவு மற்றும் சிறப்பு மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும், அந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு வழங்கப்பட்டது.

 இந்த கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.


"பின்னர், தூத்துக்குடி ஜீவன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், முதியோர்கள் தடுமாறி விழாமல் இருப்பதற்கான வழிமுறைகள், எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்தும் மருத்தவர்கள் கலந்துரையாடினார்கள்." 

இலவசமாக மருந்துகள்!!!

சுமார் 100 முதியவர்களுக்கு எலும்பு அடர்த்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக